(2ம் இணைப்பு)மட்டக்களப்பில் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி காவல்துறை பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளரும் காவல்துறை அத்தியட்சகருமான எம்.ஜமால்தீன் இன்று அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் கல்முனையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மருதமுனையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகைக்காகச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போதே அவரை இடைமறித்த ஆயுதக்குழு ஒன்று அவரைச் சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதலில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையடைந்து குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதேவேளையில் இச்சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமை கோரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளரான காவல்துறை அத்தியட்சகர் ஒருவர், இன்று இரவு 7:30 நிமிடமளவில் மருதமுனை பகுதியில் எம்மால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.