யாழ்.மீனவர் படையினரின் மிதிவெடியில் சிக்கி இரு கைகளையும் இழந்துள்ளார்

யாழ். அரியாலை கிழக்கு பிரதேச கண்ணாத்தீவு பகுதியில் அறிமுகமில்லாத வழியாக நடந்து வந்த யாழ். மீனவர் ஒருவர் சிறிலங்கா படையினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதிவெடியில் சிக்குண்டு தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

குறித்த நபர் இரண்டு கைகளையும் இழந்து படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இவரது நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரியதாஸ் ஜக்சன் வயது 31 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேவேளை இதற்கு முன்னரும் யாழ்.குடாநாட்டில் பல பிரதேசங்களில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட மிதிவெடிகளில் சிக்குண்டு பலர் அவயவங்களை இழந்துள்ளதாக யாழ். பொதுமக்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

Source & thanks : tanilwin

Leave a Reply

Your email address will not be published.