விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார பேச்சாளர் எஸ். பத்மநாதனினால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக
நிராகரித்துள்ளது.

போர் நிறுத்த அமுலாக்கல் குறித்து சர்வதேச சமூகம் உரிய முறையில் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பத்மநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த கோரிக்கைகளை நம்ப முடியாது எனவும், அதனை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை எனவும் இலங்கை சமாதான செயலகத்தின் தலைவர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து படையினர் அவதானம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளின் ஊடாக பொதுமக்களை வெளியேற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.