மூன்று வாரங்களில் போரை முடித்து விடுவோம்: ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கும் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கும் மற்றும் சிறிய அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனையடுத்தே போரை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் போராசிரியர் பீரிஸ் கூறினார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறிய அமைச்சர் போராசிரியர் பீரிஸ், போரில் விடுதலைப் புலிகளை அரசாங்க படைகள் வெற்றி கொண்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் போருக்குப் பின்னரான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அனைத்துலக நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் போராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்காவே போரை மகிந்த அரசாங்கம் நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்துலக நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் நிதியை கடன் பெறுவதற்காகவே அரசாங்கம் போரை நிறுத்தும் நாடகம் ஒன்றை ஆடுவதாகவும அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.