அனைத்துலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற சிறிலங்கா இணக்கம்

அனைத்துல நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் நிபந்தனைகளுக்கு இணங்கி அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை குறைப்பதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் பெருந்தொகையான நிதியை கடனாக கோரி வருகின்றது. ஆனால், அனைத்துலக நிதி அமைப்புக்கள் பல நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நிதி உதவிகளை வழங்கி வருவது உண்டு.

சிறிலங்காவுக்கான நிதி உதவிக்கான முதல் நிபந்தனையாக அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி அனைத்துலக நாணய நிதியம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, அரச பணியாளர்களின் எண்ணிக்கைகளை குறைப்பதுடன், தொழிற் சங்கங்களின் உரிமைகளையும் குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது என சிறிலங்கா தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 20 ஆம் நாள் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் அரச பணியாளர்களின் பல சலுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source & thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.