‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (28.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

யாழ்ப்பாணத்தில் வெகு விரையில் தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

.பி.ஆர்.எல். எப், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன.

1998ம் ஆண்டிலேயே இறுதியாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடைபெற்றன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி உள்ளிட்டோருக்கும் எதிராக சர்வதேச நீதிமன்றில் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு
தொடர சில உள்நாட்டு சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்தை நிறுத்தி அதன் மூலம் குறுகிய அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்ள சில சக்திகள் முயன்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்த சிலர் தீவிரமாக தகவல் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பூரண தெளிவு காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களின் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் கண்மூடித்தனமான செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் நாடு பாரிய அழிவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் கட்சி அமைப்பாளர்களைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை மேலும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகமும் அவசர நிவாரணங்களுக்கான இணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ், மிகவும் சிறிய பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களுடைய பாதுகாப்புதான் தமது கவனத்துக்குரிய விவகாரமாகியிருக்கின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார்.
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜோன் ஹோல்ம்ஸ் அதனைத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக அப்பாவிப் பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ள ஆயிரக் கணக்கான பொதுமக்கள் இந்த எறிகணைத் தாக்குதல்களினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கப் படையினர் சிவிலியன்கள் நிலைகள் மற்றும் வைத்தியசாலைக்கு அருகாமையில் எறிகணைத் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்த நிலைமை குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கப் பிரதிநிதி ரோஸ்மேரி டிகார்லோ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்த வேண்டாமென ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கனரக ஆயுதப் பாவனையை படையினர் கைவிட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை எனவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள் நேற்று நள்ளிரவு முதல் செயலிழந்துள்ளன. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் பாவனையிலுள்ள இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் கையடக்கத் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எவ்வித முன்னறிவித்தலுமின்றி தமது கையடக்கத் தொலைபேசிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் பற்றி அறிய முடியாதிருப்பதாகவும் பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காவே இந்த துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்திற்கும் தமக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை If;fpa ,uhr;rpaj;jpy; rpiwj;jz;liz ngw;wtUk; me;jrmw;w அமைச்சUk; MAjjhupAkhd கருணா முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேவையற்ற வகையில் கிழக்கு விவகாரங்களில் If;fpa ,uhr;rpaj;jpy; rpiwj;jz;lizngw;wtUk; me;jrmw;w அமைச்சUk; MAjjhupAkhd கருணா தலையீடு செய்து வருவதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்களினால் கருணா ஓர் தலைவராக ஏற்றுக்கௌ;ளப்படவில்லை எனவும் , மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் அந்தப் பிரதேசம் குறித்து கரிசனை காட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடிக் பிரதேசசபைத் தலைவருக்கு மரண அச்சுறுதத்தல் விடுக்கப்படுவதாகவும், பதவி விலக வேண்டுமென அழுத்தம் கொடுப்பதாகவும் பல்வேறு அப்பட்டமான பொய்களை If;fpa ,uhr;rpaj;jpy; rpiwj;jz;lizngw;wtUk; me;jrmw;w அமைச்சUk; MAjjhupAkhd கருணா, அரசாங்கத்திடம் தெரிவித்து வருவதாகவும் பிள்ளையான் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், வேறு ஓர் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபைத் தலைவராக கடமையாற்ற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத் தலைவர் கண்ணனுக்கு தமது கட்சி உறுப்பினர்கள் தெளிவு படுத்தியுள்ளதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

கண்ணன் வேறு ஓர் அரசியல் கட்சியில் இணைந்தால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமது கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சகல அரசியல் கட்சிகளும் பின்பற்றும் ஜனநாயக ரீதியான நடவடிக்கை எனவும், இதனை வேறு விதமாக அர்த்தப்படுத்தி தமக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த If;fpa ,uhr;rpaj;jpy; rpiwj;jz;lizngw;wtUk; me;jrmw;w அமைச்ச Uk; MAjjhupAkhd கருணா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் .பி.டி.பி.யின் முகாம்களை உடனடியாக மூடிவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த முகாம்களின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுககு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் ஈபிடிபி அமைப்பின் 22 முகாம்கள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் அவற்றினை உடனடியாக அகற்றுவதன் அவசியம் பற்றி; தான் ஜனாதிபதியை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வன்னியில் தற்போது சிக்கியிருக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை தொடர்பான சரியான புள்ளி விபரங்களை வெளியிடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில், அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களில் முரண்பாடு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலையில் தங்கியிருந்த 17 வயதான யாழ்ப்பாண மாணவர் ஒருவர் முதலில் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் உப்புவெளி பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியைச் சேர்ந்த மகேந்திரராஜா பிரசாத் என்பவரே தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவராவார்.

கொழும்புக்கு சென்று அலுவல்களை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிச் செல்லும் வழியிலேயே அவர் திருகோணமலையில் தங்கியிருந்தார்.
!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் மற்றும் நோர்வே குறித்து ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள கடுமையான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையப்பெறவில்லை என அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளெக் தெரிவித்துள்ளார்.

நோர்வேயும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்களுக்கு துணை போகும் நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை விடுதலை செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு, விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச இதனை தவறான முறையில் அர்த்தப்படுத்தி விமர்சனம் செய்து வருவதாக ரொபர்ட் பிளெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வட பகுதியில் அப்பாவி தமிழ்ச் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதனை தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளதென அமெரிக்காவைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய ஜெசி ஜெக்சன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான பிரித்தானிய சர்வகட்சிப் பாராளுமன்றக் குழுவினால் லண்டனின் கிறவுண் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் யுத்த நிறுத்த அமுலாக்கல் மற்றும் நிரந்தர சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்கள் குறித்து அர் இந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதாபிமான பேரவலம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு சரியானதோர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென உலக மனித உரிமை ஆர்வலரும் மதகுருமான வண .ஜெக்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறைகளின் மூலம் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஆபிரிக்கர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர போராட்டததிற்கும், இலங்கையில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் சுதந்திரப் போராட்டத்திற்கும் இடையில் ஒற்றுமைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய ஓர் நிரந்தரத் தீர்வுத்திட்டம் விரைவில் எட்டப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய தமிழர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!
காலி மாவட்ட முன்னாள் நீதவான் சியாமினி மிரினாச்சி ஆராச்சிக்கு 45 ஆண்டுகால சிறைத்தண்டனையும் , 60,000 ரூபா அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தில் விதிக்கப்படும் அபராதத் தொகைகளில் மாற்றம் செய்து மோசடி செய்ய குற்றத்திற்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் தண்டனைக் காலம் மேலும் 28 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரே நாளில் 2100 வன்னிச் சிவிலியன்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்களின் வருகை நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு வருகை தந்த சிவிலியன்களில் 900 சிறுவர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றை தினம் மட்டும் 2108 சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்தின் மோசடிகளினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் நிர்வாகத் திறனின்மை காரணமாக நாடு ஏற்கனவே பல்வேறு பாதகமான பொருளாதார விளைவுகளை எதிர்நோக்கியுள்ளதாக மத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும், பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி நிறுவனங்களது லாப வீதம் 61 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையை மேற்கோள் காட்டி அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் முறையான ஓர் பொருளாதாரத் திட்டத்தை முன்னெடுத்து ஊழல் மோசடிகளை தவிர்க்க வேண்டுமென்ற எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் இராணுவ முன்நகர்வுகள் மிகவும் நிதானமாகவும் , தொழில்சார் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

துரித கதியில் விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் அவசர முனைப்பு சிவிலியன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மிகவும் நிதானமான முறையில் சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு யுத்த முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் பல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

யுத்த நிறைவின் பின்னர் வடக்கு கிழக்கை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அல்லது அதன் ஆதரவு அமைப்புக்களோ சர்வதேச சமூகம் எவ்வித கரிசனையும் காட்டக் கூடாது என அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!
“பேச்சுவார்த்தை மூலமே தேசிய பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளது. இது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. அமெரிக்காவினதோ சீனாவினதோ மக்களை பற்றி பேச்சுநடத்த ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச்சுநடத்தவே அழைப்பு விடுத்திருந்தார்” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் எந்த நேரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!
தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக 15 சீட்டும், பலகோடி ரூபாயும் தருவதாக பேரம் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர், காமராஜர் ஆட்சி அமைப்பதாகக் கூறிக்கொண்டு இரு திராவிடக் கட்சிகளும் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதிமுக , தோழிக்காக செயல்படுவதாகவும், திமுக தனது குடும்பத்திற்காக செயல்படுவதாகவும் விஜயகாந்த் கூறினார் . தங்களது கட்சி மீது நம்பிக்கை இல்லாததால், பிறரது பலத்தை நம்பி கட்சிகள் வாக்கு கேட்டு வருவதாகவும், ஆனால், தான் தனியாக தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 15 சீட்டும், பல கோடி ரூபாயும் தருவதாக தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும் விஜயகாந்த் திடுக்கிடும் தகவலைக் கூறினார்
!!!!!!!!!!!!!!
,NjNtisapy; மக்களவை தேர்தலுக்கு தேமுதிகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருக்கிறார்.வடசென்னை தொகுதியில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் யுவராஜ் நிறுத்தப்பட்டு இருக்கிறார். மே மாதம் 13ந் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 9 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் கடந்த 26ந் தேதி அன்று வெளியிட்டார். இன்று 5 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளார். இதுவரை 14 தொகுத‌ி‌‌க்கு ‌விஜயகா‌ந்‌த் வேட்பாளர்களை அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் பா...வு‌க்கு 7 இட‌ம் ஒது‌க்குவது எ‌ன்று‌ம் மா‌நில‌ங்களவை‌க்கு ஒரு இட‌ம் கொடு‌ப்பது எ‌ன்று‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம்செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன ...‌தி.மு.. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றினா‌‌ர் . ..‌.‌தி.மு..- பா... கூ‌ட்ட‌ணி ஒரு மாபெரு‌ம் வெ‌ற்‌றி‌க் கூ‌ட்ட‌ணி எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

பா... ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கோ..ம‌‌ணி, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் .கே.மூ‌ர்‌த்த‌ி ம‌ற்று‌ம் மாவ‌ட்ட செயல‌ர்க‌ள் அட‌ங்‌கிய குழு‌வின‌ர் இ‌ன்று காலை 11 ம‌ணி‌‌க்கு போய‌ஸ் கா‌ர்‌‌ட‌ன் வ‌‌ந்தன‌ர். அவ‌ர்களை ..‌.‌ தி.மு.. பொருளாள‌ர் .ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌‌ம், ஜெய‌க்குமா‌ர், மதுசூதன‌ன் ஆ‌கியோ‌ர் வரவே‌ற்றன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ராமதா‌‌சு‌க்கு ஜெயல‌லிதா பூ‌ங்கொ‌த்து கொடு‌த்து வரவே‌ற்றா‌ர். ‌‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌‌ள்தீ‌விர பே‌ச்சுவா‌‌ர்‌த்தை நட‌த்‌தின‌ர். சுமா‌ர் 40 ‌நி‌மிட‌ம் இ‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து இருவரு‌ம் கூ‌ட்டாக செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌‌த்தன‌ர். அ‌ப்போது ஜெய‌ல‌‌லிதா கூறுகை‌யி‌ல் , ..அ‌.தி.மு.பா.. கூ‌ட்ட‌ணி இணை‌ந்து வரு‌ம் ம‌க்களவை‌த் தே‌ர்தலை ச‌ந்‌தி‌ப்பது என இ‌ன்று இரு க‌ட்‌சிகளு‌க்கு இடையே உட‌ன்பாடு ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளது.

பா.. தலைவ‌ர் அ‌‌ண்ண‌ன் டா‌க்ட‌ர் அவ‌ர்களுட‌ன் ப‌ே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த‌ப்ப‌ட்டது. இ‌தி‌ல் வரு‌ம் பொது‌த்தே‌ர்த‌லி‌ல் 7 தொகு‌திகளை ஒது‌‌க்குவது எ‌ன்று‌ம் வரு‌ம் 2010ஆ‌ண்டு மா‌நில‌ங்களவை‌க்கு ஒரு இ‌ட‌ம் கொடு‌ப்பது எ‌ன்று‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்ய‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது.

ம‌ற்ற க‌ட்‌சிகளுட‌ன் பே‌ச்சுவா‌ர்‌‌த்தை நடைபெ‌ற்று வரு‌கிறது . இ‌ன்னு‌ம் ஓ‌ரிருதின‌ங்க‌ளி‌ல் உட‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். 8 வருட‌த்து‌க்குபிறகு அ‌ண்ண‌ன் டா‌க்ட‌ர் அவ‌ர்க‌ள் எ‌ன்னை ச‌ந்‌தி‌த்து‌ள்ளா‌ர். ...‌தி.மு.பா.. கூ‌ட்ட‌ணி இ‌ந்‌‌திய அள‌வி‌ல் எ‌ந்த க‌ட்‌சியாலு‌ம் தோ‌ற்கடி‌க்க முடியாத வ‌லுவான கூ‌ட்ட‌ணியாக உ‌ள்ளது. தே‌ர்த‌ல் முடிவு‌க்கு ப‌ி‌ன்ன‌ர் இது நிரூபணமாகு‌ம் எ‌ன்றா‌ர்.

‌பி‌ன்ன‌ர் ராமதா‌ஸ் கூறுகை‌யி‌ல், அ‌ன்பு‌ச் சகோத‌ரி அ‌வ‌ர்களது கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இ‌ன்று பா.. இணை‌ந்து‌ள்ளது. இ‌ந்த கூ‌ட்ட‌ணி ஒரு மாபெரு‌ம் வெ‌ற்‌றி‌க் கூ‌ட்ட‌ணி. புது‌ச்சே‌ரி உ‌ள்பட 40 தொகு‌தி‌க‌ளிலு‌‌ம் இ‌ந்த கூ‌ட்ட‌ணிமிக‌‌ப்பெ‌ரிய வெ‌ற்‌றி பெறு‌ம். இ‌ந்த கூ‌ட்ட‌ணி‌‌யி‌ல் இணை‌ந்தது எ‌ங்களு‌க்குமிகவு‌ம்ம‌கி‌ழ்‌ச்‌சி அ‌ளி‌க்‌கிறா‌ர் எ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!!!!!
தேர்தல் கூட்டணி மாற்றம் njhlh;ghf :மத்திய மந்திரி இளங்கோவன் njuptpf;ifapy;பா. .. வெளியேறியது மகிழ்ச்சி அளிக்கிறதுvd njuptpj;Js;shh;.
கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டையை மாற்றுவது போல் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி வருகிறது பா. .. தற்போது அவர்கள் அணிமாறியதும் எதிர்பார்த்ததுதான்.
மந்திரி பதவியல் இருந்து அன்புமணி ராஜினாமா செய்த பிறகு கூட்டணி மாறும் முடிவை சொல்லியிருந்தால் சற்று நாகரீகமாக இருந்திருக்கும். பா...வின் வியாபாரம் எத்தனை நாளைக்கு லாபகரமாக இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
திருமாவளவன் கூட்டணியில் இருப்பாரா, இல்லையா என்பதை சோனியாவும், கருணாநிதியும் அறிவிப்பார்கள் . விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி விட்டார். காங்கிரசுடன் சேராததால் இழப்பு யாருக்கு என்பதை மக்கள் தெளிவுபடுத்துவார்கள்.
மூன்றாவது அணியின் வெற்றி பூஜ்யம்தான். ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் பிரதமர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டால் நாடு தாங்காது. .
இவ்வாறு மத்திய மந்திரி இளங்கோவன் கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முதுகுவலி அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வரும் முதலமைச்சர் கருணாநிதிக்காக அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். .

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி வருமாறு: அண்மையில் முதுகுவலி அறுவை சிகிச்சை செய்து கொண்டு முதலமைச்சர் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் வீட்டில் இருந்தபடியே கூட்டணி குறித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாமக கூட்டணியை விட்டு விலகி உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை எவ்வாறு சரிக்கட்டுவது என அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், தனது கணவர் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தி இருக்கிறார்.

முதல்வர் கருணாநிதி தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும், தான் பெரியாரின் சீடர் என்றும் கூறிவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ராஜாத்தி அம்மாள் தனியாக நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சில கோயில்களுக்கு சென்று இந்த சிறப்பு வழிபாடுகளை நடத்தி உள்ளார். அவர் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஷ்வரர் கோயிலுக்கும் சென்று முதலமைச்சரின் நலிவு நீங்க பிரார்த்தனை செய்துள்ளார் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து நிகழ்ந்த கலவரம் தொடர்பாக அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் மாயா கோத்னானி சிறப்பு புலனாய்வுக்குழு முன்பாக நேற்று சரணடைந்தார்.

2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து நிகழ்ந்த கலவரத்தில் அமைச்சர் மாயாவிற்கு தொடர்பிருப்பதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், அமைச்சர் மாயாவைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனையும் ரத்து செய்தது . இதனையடுத்து, முதலமைச்சர் நரேந்திரமோடியிடம் தனது ராஜினாமா கடிதத்தை
!!!!!!!
உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பா... வேட்பாளர் வருண் காந்தியின் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கு இன்று காலை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வருண் காந்தியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்பட்ட குற்றசாற்றின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் கீழ் கைதாக வருண் காந்தி இன்று பிலிபித் தொகுதிக்கு வந்துள்ளார் .

வருண் கைதாவதை தடுக்கும் எண்ணத்துடன், காவல்துறையினரின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக சாலைகளில் தடையை ஏற்படுத்த வருண் ஆதரவாளர்கள் முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்புப் கருதி வருண் காந்தியின் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் வருண் காந்தி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவர் முறையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதில்லை என அறிவித்த வருண் காந்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவையும் நேற்று திரும்பப் பெற்றார். மேலும் , இன்று காலை பிலிபித் தொகுதியில் கைதாக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நேற்று கூறியிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!
சர்வதேச பயங்கரவாதியும், அல்கய்டா அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லேடன் ஸ்தானில் பதுங்கியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்பான அயல்நாட்டுக் கொள்கை குறித்த அறிக்கையை ஒபாமா இன்று வெளியிடுகிறார்.

இதற்கு முன்னதாக அதுபற்றி நேற்று ஒபாமா பேசுகையில், அல்கய்டா அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனும், துணைத் தலைவரான அயாமன் அல்ஷவாரியாவும் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல்களை நிகழ்த்தும் அல்கய்டா அமைப்பினருக்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதிதான் புகலிடமாக உள்ளது . ஆப்கானிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாதிகள் பலர் தற்போது பாகிஸ்தானில்தானில் தஞ்சமடைந்துள்ளனர் .

அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களில் அல்கய்டா அமைப்பு தீவிரம் காட்டி வருவதாக உளவுத் தகவல்கள் எச்சரித்துள்ளன.

அல்கய்டாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு தோற்றாலும் அல்லது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டாலும், அந்நாடு மீண்டும் பயங்கரவாதிகளின் பிடிக்கும் சென்று விடும் என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், முஸ்லிம் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 பிரிவினைவாதிகள், 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் அதிபராக இருப்பவர் குளோரியா அர்ரோயா. இவர் அந்நாட்டின் மமசபனோ பகுதியில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குளோரியாவின் சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மோரோ இஸ்லாமிக் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த 60 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களைத் நேற்று முன்தினம் தாக்கியது.

இதையடுத்து நேற்று மமசபனோவுக்கு குளோரியா சென்றார். இதன் காரணமாக முஸ்லிம் பிரிவினைவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 20 பிரிவினைவாதிகள், 7 படையினர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் போன்ஸ் இன்று தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
போப்பாண்டவர் பெனடிக்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆணுறை பயன்பாடு குறித்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களைக் குலைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
ஹெச்..வி / எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் விமானத்தில் ஆப்பிரிக்கா சென்ற வேளையில், செய்தியாளர்களிடையில் பேசிய போப்பாண்டவர் கூறியிருந்ததை ஆத்திரம் வரவழைக்கும் விதமான மிகவும் தவறான கருத்து என்று லான்செட் சஞ்சிகையின் தலையங்கம் கண்டித்துள்ளது.
இது முன்னெப்போதுமில்லாத வகையில் மிகக் கடுமையான ஒரு தலையங்கம் என்று பிபிசியின் ரோம் நகர செய்தியாளர் கூறுகிறார்.
”பெரும் செல்வாக்குடைய ஒரு நபர், அறிவியல் ரீதியில் பிழையான ஒரு கருத்தை சொல்லும்போது ஏராளமானவர்கள் அதனால் பாதிப்படையக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்கள் தம்முடைய தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று லான்செட் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!
ரோமன் கத்தோலிக்க திருச்சபையைப் பின்பற்றும் ஒருவர் பிரிட்டனில் முடிக்குரியவராவதைத் தடுப்பது மாதிரியான மற்றும் முடிக்குரிய பெண் வாரிசுகளை விட ஆண் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவது மாதிரியான நூற்றாண்டுகள் பழமையான விதிமுறைகளை நீக்குவது குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் விவாதித்துவருகிறது.
எதிரணியில் உள்ள தாராளவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் இவான் ஹாரிஸ் முன்வைத்துள்ள இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை தனது ஆதரவை வழங்கியிருக்கவில்லை .
ஆனால் மக்கள் எல்லா வகையிலும் பாரபட்சத்தை ஒழிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்று பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.
1701ஆம் வருட சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட விதிமுறையானது, பிரிட்டனின் முடிக்குரியவர்கள் ரோமன் கத்தோலிக்கராக இருக்கவும் முடியாது அவர் ரோமன் கத்தோலிக்கரை மணம்முடிக்கவும் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
New Zealand 619/9d
India 305 & 47/1 (17.0 ov
(9 wickets dec; 154.4 overs) 619
(all out; 93.5 overs) 305
1 wicket; 17 overs) 47
úSl©V¬p SûPùTtßYÚm CWiPôYÕ ¡¬dùLh ùPvh úTôh¥«u CWiPôYÕ Cu²e³p Ck§Vô 1 ®dùLh CZl×dÏ 47 WuLû[f úNojÕs[Õ.
CWiPôYÕ ¡¬dùLh ùPvh úTôh¥«u êu\ôm Sôs BhP úSW Cߧ«p Ck§Vô®tÏ @TôúXô Bu ùLôÓdLlThPÕ. CûRVÓjÕ CWiPôYÕ Cu²e³p L[ª\e¡V Ck§V A¦, 1 ®dùLhûP CZkÕ 47 WuLû[ úNojÕs[Õ..
¨ë³XôkÕ A¦, 9 ®dùLhÓLû[ CZkÕ 619 WuLû[d Ï®jÕ ØRp Cu²eû^ “¥dú[o’ ùNnRÕ. Ck§V A¦ ØRp Cu²e³p Aû]jÕ ®dùLhÓLû[Ùm CZkÕ 305 WuLû[ GÓjRÕ.
!!!!!!!!!!!
1 euro = 151.69sl /67.14in
1us $ =114.15sl /50.52in
1swiss fr = 99.81sl /44.18in
1uk pound =163.42sl /72.33in
1saudi riyal =30.44sl /13.47in

Leave a Reply

Your email address will not be published.