தே.மு.தி.க.,விற்கு முரசு சின்னம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலி்ல் தே.மு.தி.க.,விற்கு முரசு சி்ன்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியதால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பொது சின்னம் ஒதுக்க கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. விசாரணையின் முடிவில் தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தே.மு.தி.க., போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் எனவும் உத்தரவிட்டது. நேற்று தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவி்த்துள்ளார். மேலும் 9 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்தார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தே.மு.தி.க.,வி‌னரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இதனால் தே.மு.தி.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.