மற்றுமொரு கடற்றொழிலாளியின் உடலம் கரையொதுங்கியது

சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மூன்றாவது கடற்தொழிலாளியின் உடலம் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் ம.குணசிங்கராசா தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்தியது.

இதில் நான்கு மீன்பிடிப் படகுகள் அழிவடைந்தன. இரண்டு கடற்றொழிலாளர்களின் உடலங்கள் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளன.

நேற்று மாலை ஒருவரின் உடலம் கரையொதுங்கியுள்ளது. ஏனைய ஐந்து பேரின் விபரங்கள் இதுவரை தெரியவில்லை எனவும் ம.குணசிங்கராசா தெரிவித்துள்ளார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.