பொலநறுவையில் ஆயுததாரிகளால் 4 ஊர்காவல் படையினர் சுட்டுக்கொலை: மேலும் 4 பேர் படுகாயம்

பொலநறுவை மாவட்டத்தில் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் உள்ள மெனிக்தெனிய பகுதியில் ஊர்காவல் படையினர் நால்வர் நேற்று புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது படுகாயமடைந்த நால்வரையும் உடனடியாக பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலநறுவை பொலிஸார் தகவல் தெரிவிக்கையில் கொல்லப்பட்டவர்கள் விவசாயிகள் எனவும் இவர்கள் மெனிக்தெனிய பகுதியில் இரவு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் விவசாயிகளாக இருந்த போதிலும், எல்லைக் கிராமங்களில் உள்ள ஏனையவர்கள் போன்று சிறீலங்கா படைகளில் ஆயுத பயற்சி பெற்றிருப்பதுடன், எல்லைப்படை அல்லது ஊர்காவல் படையினராகி ஆயுதங்களுடன் நடமாடி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தையடுத்து மெனிக்தெனிய கிராமப் பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் தற்போது கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை கந்தளாய்ப் பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது நேற்று முன்தினம் இரவு ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.