முஷாரப்பை தண்டிக்கக்கோரி வழக்கு

இஸ்லாமாபாத்: அவசர நிலையை அறிவித்து, தலைமை நீதிபதியை பதவியிலிருந்து நீக்கிய முஷாரப்பை ராஜதுரோகியாக அறிவிக்க வேண்டும், என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள சுப்ரீம் கோர்ட் கிளையில் பரூக் ரசன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

2007ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பாகிஸ்தானில் அவசரநிலையை அறிவித்து, தலைமை நீதிபதியை நீக்கினார் அதிபர் முஷாரப். அரசியல் சட்டத்துக்கு முரணாக செயல்பட்ட முஷாரப் மீது 1973ம் ஆண்டைய ராஜதுரோக சட்டப்படி குற்றம் சுமத்தப்பட வேண்டும். அவர் நாட்டை விட்டு வெளியேறாதபடி பாதுகாப்பு செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.