அரசாங்கத்திற்கு சில நிபந்தணைகளை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – ஐ.தே.க

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு சில முக்கிய நிபந்தனைகளை சர்வதேச நாண நிதியம் விதிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீண் விரயங்களை தவிர்க்கும் வகையிலான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனத்தை இல்லாமல் செய்தல், அமைச்சரவை எண்ணிக்கையை குறைத்தல், அமைச்சர்களின் வீட்டு வாடகையை ரத்துச் செய்தல் உள்ளிட்ட
நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாஙகத்தின் ஊழல் மோசடிகள் தடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட வேண்டும் என கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.