மன்னாரில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை

மன்னார் மூர் வீதியில் வைத்து நேற்று மாலை 6.45 அளவில அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியானார்.

அந்த பிரதேசத்தில் இரும்பு பொருத்தும் தொழிலில் ஈடுபட்டிருந்த செல்வராஜா கிங்ஸிலி என்ற இளைஞரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.

அவர் தமது பணியினை நிறைவு செய்து வீடு திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகளால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பிரதேசத்தில் ஏற்பட்ட பதட்ட நிலையை அடுத்து வர்த்தக நிலையங்களை நேரத்துடன் மூடும்படியும், அனைவரையும் வீட்டினுள் இருக்கும் படியும் இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.