முல்லையில் கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சமாசத்தலைவர் ம.குணசிங்கராசா கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த கிழமையிலும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தி இருவரை பிடித்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதல்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளோம்.

இடம்பெயர்ந்து நெருக்கடியான சூழலில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சிறிலங்கா கடற்படை தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் என அறிவித்த பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.

Source & thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.