வவுனியாவில் சிறிலங்கா படையினருடன் இணைந்து ஆயுதக் குழுக்களும் சோதனை

வவுனியாவில் இரவு வேளைகளில் சிறிலங்கா படையினருடன் இணைந்து ஆயுதக் குழுக்களும் வீடுகளிலும் விடுதிகளிலும் சோதனை நடத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா மனித உரிமை ஆணைக் குழுவில் முறையிட்டுள்ளனர்.

வீடுகளுக்கு செல்லும் படையினர் குடும்ப விபரங்களை கேட்பதாகவும் வங்கி கணக்கு இலக்கங்கள் கூட பெறப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில் மேலதிக விசாரணைக்காக வீட்டில் உள்ள இளைஞர்கள், பெண்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்றும் விசாரணைகள் எதுவும் இன்றி நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படையினருடன் வரும் ஆயுதக் குழுக்கள் தமிழில் உரையாடி அச்சுறுத்துகின்றனர். அத்துடன் குறிப்பிட்ட சில இளைஞர்களை வாரம் ஒரு முறை காவல் நிலையம் வந்து கையொப்பம் இடுமாறு வற்புறுத்துவதாகவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.