கந்தளாய் பகுதியில் விவசாயிகள் மீது துப்பாக்கி பிரயோகம்: 5 பேர் பலி; 2 பேர் காயம்

திருகோணமலை கந்தளாய்ப் பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது நேற்றிரவு ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீல்புல் கிராமத்திலுள்ள தமது சேனைகளில் இரவு நேர காவலுக்காகத் தங்கியிருந்தவர்கள் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்தப் பகுதியில் தற்போது தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.