அம்பாறையில் சிறிலங்கா படையினர் மீது பொறிவெடித் தாக்குதல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியா பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பக்மிட்டியா பகுதியில் வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நேற்று திங்கட்கிழமை காலை 6:40 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதலை நடத்தினர்.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் பொறிவெடித் தாக்குதலையடுத்து நேற்று சிறிலங்கா படையினர் அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதலினை மேற்கொண்டதாக அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.