இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என கருணாநிதி அறைகூவல்

கச்சதீவு விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என தமிழக மாநில முதல்வர் கலைஞர் கருணாநிதி அறைகூவல் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக கச்சதீவை புனிதப் பிரதேசமாக அறிவித்து செயற்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஜெயராம் அண்மையில் தமிழக அரசு மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு
பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கச்சதீவை புனிதப் பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில்
தெரிவித்திருந்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் வாய் தவறி இதனைத் தெரிவித்திருக்கலாம் எனவும், அந்தக் கூற்று உண்மையானதென்றால் அதற்கு எதிராக
கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.