பிரபாகரனை விரைவில் கைது செய்ய முடியும்: பிரதமர் சூளுரை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்த களத்தில் இருப்பதாகவும், அவரை விரைவில் கைது செய்ய முடியும் எனவும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க சூளுரைத்துள்ளார்.

அப்பாவி பொதுமக்களை புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், இதனாலேயே இராணுவ நடவடிக்கைகள் தாமதமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொரண மில்லாவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எஞ்சியுள்ள பிரதேசத்தை முற்றாக மீட்டெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வன்னியில் சுமார் 60,000 பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.