அம்பாறையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காயம்

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்மாந்துறையில் நேற்று முன்தினம் காவலரணில் நின்ற காவல்துறையினர் பகல் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர்.

இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அதனை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியமை காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது

காயமடைந்தவர்கள் கே பிரதீபன் வயது 28, தங்கவேல் செந்தில்ரூபன் வயது 26 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.