விஸ்வமடுவில் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்ட படைச்சிப்பாய் தங்க நகைக் கொள்ளையில்?

முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசங்களில் படை முன்நகர்வுகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் படைச்சிப்பாய் ஒருவர் தங்க நகைக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்புத்தேகம சோதனைச் சாவடியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது இராணுவ வீரரொருவரிடமிருந்து சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டன.

முல்லைத்தீவு, விஸ்வமடுவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர், தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போதே தம்புத்தேகம சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

இவரிடமிருந்து தங்க சங்கிலிகள் வளையல்கள், காதணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.டபிள்யூ,டபிள்யூ. குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.