ஆயுதங்களை களையாமலேயே பொதுமக்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அனுப்புமாறு அரசாங்கம் புலிகளிடம் கோரிக்கை

ஆயுதங்களை களையாமல் பொதுமக்களை அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அனுமதிக்குமாறு அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போது ஊடகத்துறை அமைச்சர் லகஷ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஆயுதங்களை களைந்தால் மாத்திரமே சமாதான பேச்சுவார்தைகளை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நடத்தமுடியும். அதில் மாற்றமில்லை.

எனினும் பொதுமக்களை விடுவிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை களையாமலேயே அதனை மேற்கொள்ளமுடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் உட்பட்ட சர்வதேசம் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கோரியபோதும் அவர்களை அதனை நிறைவேற்றவில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஆயுதங்களுடன் போராடுகிறார்கள்.

இந்தநிலையில் ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் இருந்து கொண்டாயினும் பொதுமக்களை விடுவிக்கவேண்டும் என எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைகளை மீறி பொதுமக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வர ஆரம்பித்துள்ளதாக அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.