‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (18.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.
அதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி .பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்கின்றத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ளமக்கள் பாதுகாப்பு வலயபகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களில் 78 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 188 பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர் .
இதேவேளையில் புதுக்குடியிருப்பு, பச்சைப்புல்மோட்டை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று காலை தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
30 நிமிடத்துக்கு ஒரு தடவை என மாறி மாறி வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.
வான்குண்டுத் தாக்குதல்களில் மட்டும் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் 188 பேர் காயமடைந்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த சிறுவர்களை பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு .நாவின் சிறுவர்களுக்கான நிதியமான யுனிசெவ் அழைப்பு விடுத்துள்ளது.

மோதல் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உயிரிழப்பதாகவும்,ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தொற்றுநோய்களிற்கு உள்ளாவதுடன் போதிய உணவின்றி குறை போசணையுடன் காணப்படுவதாக யுனிசெவ்வின் நிறைவேற்று பணிப்பாளர் ஆன் எம் வெனிமன் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், “வழமைபோன்று குறித்த பகுதிகளிற்கு உயிர்காப்பு நடவைக்கைகளிற்கும் விநியோக பணிகளை மேற்கொள்ளவும் மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் உடனடியாக அவசியமாகும், அத்துடன் மோதல் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கக் கூடிய இடங்களை நோக்கி பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் .சிறுவர் உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என ஆன் எம் வெனிமன் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பயங்கரவாதத்திற்கு துணை நிற்பதாக அரசு குற்றம் சாட்டி உள்ளது .தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து உலகிற்கு தெரியபடுத்த எவரும் முன்வருவதில்லை பதிலுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பொய்பிரச்சாரங்கள் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல் பொய்பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலப்பெரும தெரிவித்துள்ளார் .நேற்று மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் ஆதரவு வழங்க வேண்டுமென தாம் கோரவில்லை எனவும் அரசுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கும் இணைய தளங்களில் வெளியாகும் புள்ளி விபரங்களுக்கு நிகாரன புள்ளி விபரங்களையே நவனீதம்பிள்ளையின் அறிக்கைகளிலும் காணக்கூடியதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தனது அறிக்கையில் அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 2700 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தகது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது நேற்றிரவு தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தேவாபுரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவர்கள் மீது நேற்றிரவு 8:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.
இதில் சிறிலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர் என மருத்துவமனை வட்டார தகவல்களில் இருந்து தெரியவருகின்றது.
இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தியிருக்கின்ற போதும் அவர்கள் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்களை தெரிவிக்கவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை சிறிலங்கா படைகள் நடத்தி வருவதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
அமெரிக்க, பிரித்தானிய, பிரான்ஸ், நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கொழும்பில் உள்ள அதிகாரிகள் தரத்திலான இராஜதந்திரிகளை அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறினார்.
ஆனால், போரில் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் எதுவும் அங்கு இல்லை எனவும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திபில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் அரச தலைவர் செயலக அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் ஆகியனவற்றின் உதவியுடன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜதந்திரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது .
இச்சந்திப்பு குறித்து அரசாங்கமோ அல்லது கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களோ ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்திய அதிகாரி வரதராஜா கூறிய கருத்துக்களை ஏற்கமுடியாதென தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா, மோதல் நடைபெறும் பகுதிகளில் மக்களுக்கு அரசினால் அனுப்பப்படும் மருந்துகளை விடுதலைப் புலிகள் சூறையாடுவதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
உள்நாட்டு மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான சகல தேவைகளையும் எமது அரசாங்கம் நிறைவேற்றும். ஓர் நாட்டின் அரசாங்கம் என்ற ரீதியில் தனது சொந்த மக்களை என்றும் கைவிடப் போவதில்லை. இடம்பெயர்ந்துள்ள சகல மக்களுக்குமான அனைத்துத் தேவைகளையும் நாம் வழங்கி வருகின்றோம்.
மோதல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரியமுறையில் சிகிச்சைகள் வழங்கப்படவேண்டும் என்பதற்காக 358 மருத்துவர்களையும் 600 தாதிகளையும் வடக்கு கிழக்க பகுதிகளுக்கு நியமித்துள்ளளேன்.
அத்துடன் மோதல்கள் நடைபெறும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களின் நலன்கருதி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் அம்மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை நாம் தொடர்ந்தும் அனுப்பி வருகின்றோம்.
இவ்வாறான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவப் பொருட்கள் எதுவும் இல்லையென்ற டாக்டர் வரதராஜாவின் கூற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுமக்களுக்கு அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப்பொருட்களில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகளால் சூறையாடப்படும் நிலையில் மீதமுள்ளவையே பொதுமக்களைச் சென்றடைகின்றது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மருத்துவ மனைகளின் மருத்துவ உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் விடுதலைப்புலிகளாலேயே எடுக்கப்பட்டுள்ளது.
எனவே சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தெரிவித்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பி வையுங்கள் என்ற கூற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இடை நிறுத்தப்பட்டுள்ளதால் நூற்றிற்கும் மேற்பட்ட பயணிகள் யாழ்ப்பாணம் திரும்ப முடியாமல் திருகோணமலையில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்குமிடையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நோயாளர்களை அழைத்து வருவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இக்கப்பல் பயன்படுத்தப்பட்டு வருவதையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

திருகோணமலையில் தங்கியிருக்கும் பயணிகளைப் பொறுத்த வரை இப்படி நீண்ட காலம் தங்கியிருப்பதால் தமது நாளாந்த செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலையில் கஷ்டப்படுவதாகவும் அறிய முடிகின்றது .

அடுத்த பயணிகள் கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அதிகாரிகளினால் கூட உறுதியான தகவலை தெரிவிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஒருவார இடைவெளியின் பின் இன்று மீண்டும் ஆரம்பமாக இருக்கின்றது.
கப்பல் சேவையை இன்றும், எதிர்வரும் 24 ஆம் 30 ஆம் திகதிகளிலும் நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.
கப்பல் பயணத்துக்குச் செயலகத்தில் பதிவு செய்வோரைப் பயணத்துக்கு இரு தினங்களுக்கு முன்னர் பதிவுகளை மேற் கொள்ளும் படி அரச அதிபர் கேட்டுள்ளார்.
எனினும் குறுகியகால அறிவித்தலில் கப்பல் சேவை நடைபெறும் திகதிகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
அதேவேளை கொழும்பில் இடம்பெறும் தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை இன்று காலை 7 மணிக்கு பயண ஏற்பாடுகளுடன் யாழ் . ரயில் நிலையத்துக்கு வருகைதந்து பயணத்தை மேற்கொள்ளுமாறு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் .விக்னேஸ்வரன் கேட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் பம்பலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் ஞாயிறு இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 23 தமிழ் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட அனைவரும் வடக்கு. கிழக்கு மத்திய மலைநாட்டைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் விடுதிகளிலும். உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியுள்ளார்கள் எனவும் தங்கியிருப்பதற்கான உறுதியான காரணத்தை தெரிவிக்க தவறியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பிரிவு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆயினும் இந்த தாக்குதலில் படைத்தரப்புக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இராணுவ சீருடைக்கு சமனான ஆடையணிந்த ஒருவரே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்து குண்டினை வெடிக்க வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார் .

இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போதே இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவ முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தின் விஷேட படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரால் மேற்படி தற்கொலைக் குண்டுதாரி இனங்காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை அழைத்து சோதனையிட முற்படுவதற்கிடையில் குறித்த குண்டுதாரி தனது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்துள்ளார்.

இதனால், குறித்த குண்டுதாரி உடல் சிதறி பலியாகியுள்ளார் . சம்பவத்தை அடுத்து தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ரீ56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

சம்பவத்தை அடுத்து படையினரால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் , அப்பகுதியில் மறைத்துள்ள விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதாக தாக்குதல்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை .நா.வின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார் . இந்த தொலைபேசி உரையாடலில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகிறது.

மேலும், இந்த தொலைபேசி உரையாடலில்

இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் உணவு,மருந்து பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனுப்பிவைக்கப்படுவது தொடர்பில் அவர் ஜனாதிபதியிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருகை தருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருக்கின்றது. அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி பொதுமக்கள் தொடர்ந்து வருகைதந்து கொண்டிருப்பதனால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

உணவுப்பொருட்களை கொண்டுசெல்வதற்காக பாரியளவான கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ச்சியாக கிரமமான முறையில் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன .

இவ்வாறான சூழ்நிலையில் புலிகள் பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் இவ்வாறான தொருநிலையிலும் அரசியல் தீர்வொன்றிற்கான கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படுகின்றது என்று “ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்று.

இதேவேளை இலங்கை அரசாங்கதிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான உறவை தொடர்ந்து பேணுவதற்கு இவ்வாறான தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று .நா செயலாளர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறைக் கைதிகள் அடைத்து வைக்கப்படும் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள இடங்களிலிருந்து 33 கைத் தொலைபேசிகள் அத்துடன், மூன்று கிலோ போதைப் புகையிலை வகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் அடைத்து வைக்கப்படும் தொகுதிகளில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து ஆண்களும் பெண்களுமாக மொத்தம் 80 பயிலுநர் சிறைச்சாலை ஊழியர்கள் திங்கட்கிழமை இத் தேடுதலை மேற்கொண்டனர்.
திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இத் தேடுதலின் போது குறிப்பிட்ட சீமெந்து நிலம் மற்றும் சுவர்ப் பகுதிகளில் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவை வர்ணம் பூசப்பட்டிருந்ததை அவதானித்த சிறைச்சாலை ஊழியர்கள் இந்த செல்போன்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர்.
இதனை விட மேலும் சில கைத் தொலைபேசிகள் சில வெடிப்புக்குள்ளான இடங்களில் மிக நுட்பமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் அவையும் கண்டு பிடிக்கப்பட்டன.
இத்தேடுதலின் போது கண்டு பிடிக்கப்பட்ட போதைப் புகையிலை வகைகள் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தொகுதியின் பல்வேறு இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை ஊழியர்களால் இனங்காணப்பட்டதாகவும் அப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகக் கோரி அதிருப்தி குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்த கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன அது தொடர்பில் ரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த பிரேரணையை ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வழிமொழிந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர சமரவீர, டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, லக்ஷ்மன் செனவிரத்ன, தயாசிறி ஜயசேகர , ருக்மன் சேனாநாயக்க, சஜித் பிரேமதாஸ, ஜோன்சன் பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய நிலையில், தலைவர் ரணில் விக்கிரமசிங்க மௌனமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எழுந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியில் பிரச்சினை ஒன்று இருப்பதாக தனக்கு தோன்றுவதாகவும் எனினும் , தான் பொதுச் செயலாளர் என்ற காரணத்தினால் யாருக்கும் பக்கச்சார்பாக கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பிரச்சினை தலைவரினாலேயே தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், பாராளுமன்ற குழுக் கூட்டத்தை மீண்டும் 5 மணிக்கு கூட்டுவது என்ற முடிவுடன் எம்.பி.க்கள் அனைவரும் சுமார் 11 மணியளவில் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள சென்றனர். அந்த வகையில் நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெற்றதாக கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கனடா வாழ் தமிழ் இளைஞர் குழுவொன்று கனடா ரொறன்ரோ நகரிலிருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகர் வரை நடை பயணத்தினை தொடங்கியுள்ளது.
ரொறன்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து இவர்கள் கடந்த 4 ஆம் திகதி நடை பயணத்தை தொடங்கினர்.
சிக்காகோ நகரிலிருந்து ஒலிபரப்பாகும் ஒப்ரா வின்பிரி (Oprah Winfrey) அரட்டை அரங்க நிகழ்வில் கலந்துகொண்டு ஈழத் தமிழரின் இக்கட்டான நிலைமையை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவதே தமது நடை பயணத்தின் நோக்கமென இக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவுக்குள் தமது நடைபயணத்தை முடித்த நிலையில் நடை பயணக் குழுவினர் தற்போது அமெரிக்க எல்லையை அடைந்துள்ளனர். கலிபோர்னியாவை வசிப்பிடமாக கொண்ட ஒப்ரா வின்விரே அம்மையார் நடத்தும் அரட்டை அரங்கம் அமெரிக்காவில் பரவலான வரவேற்பை பெற்ற நிகழ்வாகும் .
அதனால், அமெரிக்க பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள இவர் கடந்த அமெரிக்கத் தேர்தலில் முன்னாள் செனட்டர் பராக் ஒபாமாவின் வெற்றிக்கு வழிவகுத்துக்கொடுத்தார். அதற்கு நன்றிக்கடனாக அம்மையாருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமரிக்க செனட்டில் ஒரு ஆசனத்தை கொடுக்க முன்வந்தார்.
ஆபிரிக்க அமெரிக்கரான ஒப்ரா அம்மையார், அரட்டை அரங்கம் மூலம் அரசியல் தீர்வுகளையும் கொள்கைகளையும் மாற்றியமைக்க வழியமைத்தவர். இந்த அரட்டை அரங்கில் கலந்து தமிழரின் நிலைமை பற்றி உலகிற்கு எடுத்துரைப்பதும் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுமே இந்த இளைஞர்களின் பிரதான நோக்கமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கும் ஒப்ரா வின்விரே அம்மையாருக்கும் இடையிலிருக்கும் பிணைப்பும் கருத்து ஒருமைப்பாடும் தமிழர்களுக்கு சாதகமாக அமையுமென இவர்கள் நம்புகின்றனர் .
!!!!!!!!!!!!!!!!!!!!
லக்ஷ்மியின் திருவுருவப் படத்தை வாகனத்தில் வைத்து அலங்கரித்து யாழ்ப்பாணத்துக்கு சமாதான யாத்திரை போவதாக ஒலிபெருக்கியில் கூறிய நான்கு பேரை ஹிக்கடுவ பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
இவர்கள் கந்தளாய்ப் பகுதியில் இருந்து புறப்பட்டு கதிர்காமம் ஊடாக வரும்போது ஹிக்கடுவவில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சமாதான ஊர்வலம் மற்றும் சமாதானம் வேண்டி பூசை செய்ய இவர்களால் சேகரிக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
வழிக்கு வழி இவர்கள் உண்டியல்கள் மூலம் இப்பணத்தை சேகரித்ததாகவும், அதில் 50 ஆயிரம் ரூபா சில்லறைக்காசும், 10 ஆயிரம் ரூபா நாணயத் தாள்களும் காணப்பட்டன.
சமாதான யாத்திரைக்குப் பாதுகாப்பு அனுமதி எதுவும் இவர்கள் பெறவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மக்களிடம் சமாதானப் பாதை சென்று ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளனர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் காலி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.
சமய நிகழ்வுகள் எதுவானாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அக்குரஸ்ஸ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!
போ‌ட்டி .‌தி.மு.. நட‌த்‌தி வ‌ந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆ‌கியோ‌ர்தி.மு.. தலைவ‌ர் கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் அ‌க்க‌ட்‌சி‌யி‌ல் இணை‌ந்தன‌ர்.தி.மு..வில் இணைவதாக 50 ஆயிரம் உறுப்பினர்கள் கையெழுத்து போட்ட படிவத்தினை இருவரு‌ம் கருணாநிதியிடம் வழங்கினர்.

.தி.மு. .வில் இருந்து விலகி போட்டி .தி.மு.. நடத்தி வந்த எல் .கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் தி.மு..வில் இணையும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, தங்களது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் அவர்கள் தி.மு..வில் இணைந்தனர்.

விழாவில், அமைச்சர்கள் .அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு..ஸ்டாலின், பொன்முடி, ..வேலு, பரிதி இளம்வழுதி, பூங்கோதை , எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மத்திய அமை‌‌ச்ச‌ர் வேங்கடபதி, கவிஞர் கனிமொழி, தி.மு.. துணைப் பொதுச் செயலர் சற்குண பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, .தி.மு..வில் இருந்து விலகி தி.மு..வில் இணைவதாக 50 ஆயிரம் உறுப்பினர்கள் கையெழுத்து போட்ட படிவத்தினை எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினர். முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் இரண்டு பேருக்கும் தி.மு. . கரைவேஷ்டியை வழங்கினார்.

பின்னர், தி.மு..வில் இணைந்த எல்.கணேசன் பேசுகையில், ” 15 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கழகத்தில் இணைந்துள்ளோம். 2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முதலமைச்சர் கருணாநிதி தான் என்னை திருச்சியில் போட்டியிட செய்தார்.

இதனால், 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு. .வை எதிர்த்து திருச்சி தொகுதியில் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று வைகோவிடம் கூறிவிட்டேன். வைகோ கொள்கைவாதி கிடையாதுஎன்றார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு பு‌திதாக 14 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதை‌த் தொட‌ர்‌ந்து உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ன்நீ‌திப‌திக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 58 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌ற்போது 44 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 16 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களில் புதிய நீதிபதிகளை நியமிக்க 3 மாவட்ட நீதிபதிகள் உள்பட 14 பேரை உய‌ர்நி‌திம‌ன்ற தலைமை நீதிபதி சிபாரிசு செய்தார். இதற்கு உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம் அனுமதி அளித்து, குடியரசு‌த் தலைவ‌ரி‌ன் ஒப்புதலுக்காக மத்திய அரசு மூலம் அனுப்பி வைத்தது.

14 பேரையும் சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் புதிய நீதிபதிகளாக நியமிக்க நேற்று குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, நேற்‌‌றிரவு 8 மணியளவில் நீதித்துறை மரபுபடி ஆவணங்களில் இந்தியில் கையெழுத்திட்டனர். தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே வீட்டுக்கு சென்று அவர் முன்பு கையெழுத்திட்டனர்.

இவ்வாறு கையெழுத்திட்ட ஆவணங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .இன்னும் ஒருசில தினங்களில் நியமன உத்தரவு சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்துக்கு வந்து சேரும். இதைத்தொடர்ந்து 14 பேரும் புதிய நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள். இவர்களுக்கு , தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே பதவி பிரமாணம் செய்து வைப்பார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்மீது தா‌க்குத‌ல் நட‌த்த காரணமாக இரு‌ந்த காவ‌ல்துறை உயர‌திகா‌ரிகளை த‌ற்கா‌லிக ப‌‌ணிநீ‌க்க‌ம் செ‌ய்ய‌க் கோ‌ரி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் வரு‌ம் 19 ‌ம் தேதியன்று மாபெரு‌ம் பேர‌ணி நட‌த்து‌கி‌ன்றன‌ர்.

26-வது நாளாக இன்றும் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்நீ‌திம‌ன்‌றத்தை புறக்கணித்துவி‌ட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்க தலைவர் பால் கனகராஜ் தலைமையில் நட‌ந்த தர்ணா போராட்ட‌த்‌தி‌ல் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

அப்போது பே‌சிய பால்கனகராஜ், ” வரு‌ம் 19 ‌ம் தேதி மாபெரும் கண்டன பேரணி நடத்த உள்ளோம்.இதில், தமிழ்நாடுபுது‌ச்சே‌ரி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 30,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நமது போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அவ்வப்போது சில பிரச்சனைகள் எழுகின்றன.ஆனால் அவற்றை நாம் கவனத்துடன் கையாள வேண்டும்.சில வழ‌க்க‌றிஞ‌ர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

போராட்ட பந்தலில், பேரணி நடத்துவதற்காக நிதி திரட்டும் வகையில் அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.இதில் ஏராளமான வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் பெரு‌ந்தொகையை செலுத்தினர்.

‌நீ‌திம‌ன்ற வளாகத்தில் இன்று 5 இடங்களில் இலவச சட்ட உதவி முகாம் அமைக்கப்பட்டிருந்தது.அதன் மூலம் பொது மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

!!!!!!!!!!!!!!!!!!!!!
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதில்லை என தேமுதிக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தனித்துப் போட்டியிடுவதா அல்லது வேறு அணியில் சேர்வதா என்பது குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் மக்களவை தேர்தலில் இதுவரை கூட்டணி குறித்து தெளிவான நிலை ஏதும் ஏற்படவில்லை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழக காங்கிரஸ்தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், கட்சி தலைவரை சந்திப்பதற்காக டெல்லி படையெடுத்துள்ளனர். தொகுதி பங்கீடு மற்றும் ஆதரவாளர்களுக்கு சீட் ஆகிய விஷயங்கள் குறித்து அவர்கள் கட்சி தலைவரிடம் தங்கள் தரப்புகருத்தை எடுத்து கூற உள்ளனர். .

மக்களவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மே 13-ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது.
தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்த முயற்சிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு நடந்து முடிந்துள்ளது .

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு,சட்டமன்ற கட்சித்தலைவர் சுதர்சனம் -, மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், .சிதம்பரம், .வி.கே. எஸ். இளங்கோவன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இந்த தலைவர்கள் கட்சித் தலைவர் சோனியாவை சந்திக்க தனித்தனியே டெல்லி புறப்பட்டுசென்றுள்ளனர்.

மக்களவை தேர்தலில் போட்டியிட தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை இந்த தலைவர்கள் சோனியாவிடம் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தங்களது ஆதரவாளர் களுக்கு அதிக சீட்களை தருவதில் மிகவும் முனைப்போடு உள்ளனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இடம் பெறும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித் திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை பிரச்சனையில் காங்கிரசை கடுமையாக விமர்சித்த மற்றும் கட்சித் தலைவர் சோனியாவின் படத்தை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதா என்று சில தலைவர்கள் அதிருப்தி தெரிவித் திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் சோனியாவிடம் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்து கூறலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!
NûUVp GiùQn HtßU§dÏ ®§dLlThÓs[ RûPûV Uj§V AWÑ úUÛm KWôiÓdÏ ¿h¥jÕs[Õ.
EsSôh¥p NûUVp GiùQ«u úRûYûV G§oùLôs[Üm, ®ûXûVd LhÓdÏs ûYdÏm YûL«Ûm CkR SPY¥dûL GÓdLlThÓs[Õ.
YÚm 2010-m BiÓ Uôof 16-m úR§ YûW CkRj RûP ¿¥dÏm.
Øu]RôL LPkR BiÓ EsSôh¥p NûUVp GiùQn ®ûX A§L¬jRÕ. CRû]VÓjÕ Aû]jÕ ®RUôL NUûVp GiùQnL°u HtßU§dÏ RûP®§dLlThPÕ
!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!
ஜெனீவாவில் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இனவாதத்திற்கு எதிரான .நா. மாநாட்டில் பங்கேற்குமாறு மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாநாட்டை பல நாடுகள் குறிப்பாக மேற்கு நாடுகள் புறக்கணிக்கவிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் ஆனால், மனித குலத்துக்கு முக்கியமான விடயமாக விளங்கும் இனவாதத்திற்கு எதிரான மாநாட்டில் சர்வதேச நாடுகள் பங்களிப்பு வழங்குவது அவசியமானது என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் கல்பிரேயுடனான சந்திப்பின் போதே நவநீதம்பிள்ளை இதனை தெரிவித்திருப்பதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது.
இனவாதத்திற்கு எதிரான ஜெனீவா மாநாட்டில் இஸ்ரேல் தொடர்பாகவும் சிறுபான்மையினங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அடக்குமுறைகள் தொடர்பாகவும் ஆராயப்படவிருப்பதால் பல நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக அறியவருவதாகவும் ஆனால், அவசியம் அந்த நாடுகள் பங்குபற்ற வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் கல்பிரே, மாநாட்டுக்கு சுவிட்சர்லாந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆக்கபூர்வ தேவைகளுக்காக அணுசக்தியை பயன்படுத்தும் உரிமை இரான் உட்பட அனைத்து நாடுகளுக்கும் உள்ளது என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆணு ஆயுதப் பரவல் தடுக்கப்பட வேணடும் என்றும் லண்டனில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களை கொண்டிருக்காத நாடுகள், அத்தகைய ஆயுதங்களைப் பெறப்போவதில்லை என்று உடன்பட்டால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் தங்களிடம் உள்ள அணு குண்டுகளின எண்ணிக்கையை குறைக்க முன்வரும் என்றும் இது போன்ற நியாயமான, சமத்துவமான ஒரு உடன்படிக்கையை தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அணுசக்தி தேவை எனவே, அணு ஆயுதங்களை கொண்டிராத நாடுகள் அணு சக்தியைப் பெற்றுக் கொள்ள அனைத்து உதவிகளும் செய்யப்பட வேண்டும் என்று கார்டன் பிரவுன் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ரோமன் கதோலிக மதத்தின் தலைவர் என்ற முறையில் பாப்பரசர் பெனடிக்ட் ஆப்பிரிக்கா கண்டத்திற்கான தனது முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
முதலில் கேமரூன் நாடு சென்றுள்ள அவர், அங்கு திறந்தவெளி பிரார்த்தனை ஒன்றை நடத்துவதுடன் ஆர்பிரிக்க கண்டத்தில் உள்ள கதோலிக குருமார்களை சந்தித்து அக்டோபரில் ரோமில் நடக்கவுள்ள சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் பற்றியும் பேசுவார்.
ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிய ஆணுரைகளை வினியோகிப்பதல்ல என்று குறிப்பிட்ட பாப்பரசர், அது பிரச்சனையை மேலும் மோசமாக்கும் என்று குறிப்பிட்டார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!
ரஷ்யாவின் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு பெரிய அளவில் ஆயுத பலத்தை சேர்க்கும் திட்டத்தை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வேடேவ் அறிவித்துள்ளார்.
உலகில் அரசியல் பதற்றமும், இராணுவப் பதற்றமும் நிலவுவதால் ரஷ்யப் படைபலத்தை நவீனப்படுத்துதல் அவசியமாகிவிட்டது என்றும், இது 2011 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார் .
நேடோ அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டிருப்பது பற்றியும் பிராந்திய நெருக்கடிகள் பற்றியும் ரஷ்ய அரசு அக்கறை கொண்டுள்ளது மேலும் ரஷ்யாவின் கேந்திர முக்கியத்துவம்மிக்க அணு ஆயுதப் படைகளை நவீனப்படுத்தலுக்கு முன்னுரிமை வழங்கப்படும என்றும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அமெரிக்கா தனது ஏவுகணை எதிர்ப்பு வலையத்தை நிறுத்தி வைக்கத் திட்டமிடுவது பற்றியும் பனிப் போர் முடிந்த பிறகு நேட்டோ அமைப்பு விஸ்தரிக்கப்படுவது குறித்தும் ரஷ்யா கோபம் கொண்டுள்ளJ
!!!!!!!!!!!!!!!!
sports
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் மேற்கிந்திய அணியை இங்கிலாந்து அணி 146 ரன்களில் படு தோல்வியுறச் செய்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.சாரா டெய்லர் 78 ரன்களையும் கிளாரி டெய்லர் அதிரடி 65 ரன்களையும், துவக்க வீராங்கனை அட்கின்ஸ் 50 ரன்களையும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 90 ரன்களுக்கு சுருண்டது.இங்கிலாந்து அணியில் மார்ஷ் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

!!!!!!!!!!!!!!!!!
1 euro =148.98 sl /66.99in
1 us $ =114.15 sl / 51.33in
1 swiss fr =96.82 sl /43.54 in
1 uk pound =160.46 sl / 72.16in
1 saudi riyal = 30.43 sl /13.68 in

Leave a Reply

Your email address will not be published.