கைமாறியது அப்பல்லோ சிந்தூரி!

முன்னணி பங்கு வர்த்தக நிறுவனமான அப்போலோ சிந்தூரியை முழுவதுமாக கையகப்படுத்தியது ஆதித்ய பிர்லா. அப்போலோ சிந்தூரி தேசிய பங்குச் சந்தைக்கு சமீபத்தில் அளித்த அறிக்கை ஒன்றில் ஆதித்ய பிர்லா நிறுவனம் தனது 76 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆதித்ய பிர்லா நிறுவனம், பிர்லா சன்லைஃப் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் லிமிடெட் (BSDL) என்ற பெயரில் தற்போது இன்ஷ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்டுகளை விநியோகம் செய்து வருகிறது. அதன் தற்போதைய நிர்வாக இயக்குனரான சுதாகர் அப்போலோ சிந்தூரியின் புதிய இயக்குனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ சிந்தூரி நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்ட அப்போலோ மருத்துவமனை குழுமத்தால் துவக்கப்பட்டதாகும். அப்போலோ மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் பிரதாப் ரெட்டி அப்போலோ சிந்தூரியை துவக்கினார். அவரது குடும்பத்தினர் இதன் முதன்மையான பங்குதாரர்களாக இருந்தனர். அவர்களிடம் இருந்து அனைத்துப் பங்குகளையும் வாங்கியுள்ளது பிர்லா நிறுவனம்.

இன்னும் சில மாதங்களில் அப்போலோ சிந்தூரியின் பெயர் மாற்றப்படுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.