மட்டக்களப்பில் சிறிலங்கா படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதல்: 2 பேர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது நேற்றிரவு தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தேவாபுரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவர்கள் மீது நேற்றிரவு 8:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதில் சிறிலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர் என மருத்துவமனை வட்டார தகவல்களில் இருந்து தெரியவருகின்றது.

இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தியிருக்கின்ற போதும் அவர்கள் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்களை தெரிவிக்கவில்லை.

Source & Thanks: tamilwin

Leave a Reply

Your email address will not be published.