சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளிற்கு அடிபணியப் போவதில்லை ஜனாதிபதி தெரிவிப்பு

வீரகேசரி இணையம் 3/17/2009 2:29:16 PM – நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளத் திட்டமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் இலங்கை எந்தவொரு நாட்டினதும் காலானித்துவ நாடாக செயற்படாதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படாதெனவும் அரசாங்கத்திற்கு போதியளவு வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கப் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ஏ.பி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலரினை கடனாக பெறும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. E-mail to a friend

Source & Thanks : virakesar

Leave a Reply

Your email address will not be published.