மாத்தறையில் சுற்றிவளைப்பு; 99 தமிழர்கள் சந்தேகத்தில் கைது

மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி, குறித்த மாவட்டத்தில் அடிக்கடி நடமாடினார் எனவும் அப்பகுதியிலேயே நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

Source & thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.