ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை தடுக்கக்கோரி ரஷ்ய நாட்டு தூதரிடம் தமிழக மாணவர்கள் கோரிக்கை

சென்னையில் தமிழீழ ஆதரவு மாணவர்கள் ஈழமக்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி சென்னையிலுள்ள ரஷ்ய நாட்டு தூதரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

கடந்த சனிக்கிழமை ( 14.03.2009 ) அன்று சென்னை மன்றோ சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்ட தமிழீழ ஆதரவு மாணவர் போராட்டக் குழுவினர்

சர்வதேச சமூகமே,

“உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது “. தியாகி முத்துக்குமார்….

சர்வதேச சமூகமே,

1. இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து..
2. ஈழத் தமிழர் பிரச்சினையை அய்.நா பாதுகாப்பு சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்.
3. ஈழத்தி நடைபெறும் தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி.
4. ஈழத்தில் தற்போது நிலவும் உணவுப் பற்றாக்குறையால் இறக்கும் தமிழர்களை காப்பாற்ற உடனே நடவடிக்கை எடு.
5. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு.

என்றக்கோரிக்கைகளை முழங்கியபடி சேப்பாக்கத்திலுள்ள ரஷ்ய நாட்டு தூதரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வினை சிறிராம், செந்தில், பாரதிராசா போன்ற மாணவர்களும் மென்பொருள் துறை வல்லுநர்களும் ஒருங்கிணைத்திருந்தனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.