முல்லைத்தீவில் இருந்து காயமடைந்த 450 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து இன்று மாலை 5.40 அளவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் 450 காயமடைந்த பொதுமக்கள் புல்மோட்டை பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கைப் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களாவர்.

இவர்கள், புல்மோட்டையில் உள்ள கனிய மணல் திணைக்களத்தில் தங்கியுள்ள இந்திய மருத்துவர்களின் சிகிச்சைகளுக்காக சுமார் 10 பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று அழைத்து வரப்பட்டவர்களில் சிறுகாயங்களுக்கு உள்ளானவர்கள், சிகிச்சையளிக்கப்பட்டு வவுனியா செட்டிக்குளம் முகாமுக்கு அனுப்பப்படவுள்ளனர்

கடுமையாக காயமடைந்தவர்கள், புல்மோட்டையில் உள்ள இந்திய மருத்துவ முகாம்களில் சிகிச்சையளிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை இதுவரை 11 தடவையாக முல்லைத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளவர்களின் தொகை நாலாயிரத்திற்கும் அதிகமாகும்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.