யாழ். குடாக்கடலில் மீன்பிடிக்க படையினர் தடை விதித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் கடற்பிராந்தியத்தில் படைத்தரப்பு மேலதிகமாக மீன்பிடித் தடையை விதித்துள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மற்றும் மன்னார் மீனவ சங்க தரப்புகள் தெரிவித்துள்ளன.

காங்கேசன்துறை மற்றும் புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கு இடையிலான படையினரின் போக்குவரத்துக்கு ஏதுவாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

யாழ்ப்பாண கடல்ஏரியில் பாசையூர், குருநகர், கொழும்புத்துறை மற்றும் அரியாலை ஆகிய இடங்களில் உள்ள மீனவர்கள் வெளியிணைப்பு இயந்திர படகுகளை பயன்படுத்த படைத்தரப்பு தடை விதித்துள்ளது.

இதேவேளை காங்கேசன்துறைக்கும் மன்னாருக்கும் இடையிலான படையினரின் போக்குவரத்துக்கு கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதை முன்னிட்டு பாலைதீவு, கல்முனை மற்றும் மாதவன்முனை ஆகிய கடல்பகுதிகளிலும் வெளியிணைப்பு இயந்திர படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்பு இயந்திரங்கள் இல்லாத படகுகள் மூலம் மீனவர்கள்,ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.