சுதுமலை இளைஞரை கொழும்பில் காணவில்லை

யாழ். மாவட்டத்தில் உள்ள மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொழும்பில் காணவில்லை என அவரது தாயார் யாழ். மனித உரிமை அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளார்.

தர்மலிங்கம் தர்சன் (வயது 26) என்ற இளைஞனே கடந்த சனிக்கிழமை (07.03.09) முதல் காணாமல் போய் உள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கொழும்பு சென்று விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பின்னர் அவர் விடுதிக்கு திரும்பவில்லை என்றும் தயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவர் கடத்தப்பட்டடிருக்கலாம் எனவும் அவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தாயார் கூறுகின்றார்.

இந்த முறைப்பாட்டை யாழ். மனித உரிமை அலுவலகம் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.