இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது: நாகர்கோவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அத்வானி

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது என்று நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று மாலை நடந்த முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான அத்வானி பேசினார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி, தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மத்திய மந்திரி மான பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்தும் பேசினார்.

அவர் இலங்கை பிரச்சினை தொடர்பாக பேசியதாவது:

இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசியாவில் வாழும் தமிழர்களை பற்றி கவலைப்படும் தமிழக மக்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கையில் கொல்லப்படும் தங்கள் சகோதரர்களுக்காக படும் வேதனைகளை, கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

பாகிஸ்தானில் இருந்து வருகிற பயங்கரவாதமானாலும் சரி, வங்காளதேசத்தில் இருந்து வரும் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, அவற்றை கட்டுப்படுத்துவதிலும், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சினையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் காங்கிரஸ் அரசு நிர்வாகம் தோற்று போய்விட்டது.

எனவே முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

3 செயல் திட்டங்கள்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 3 செயல்திட்டங்களை மக்கள் முன் வைக்க உள்ளது. ஒன்று நல்லாட்சி. 2-வது மேம்பாடு. 3-வது பாதுகா பு. நல்லாட்சி என்றால் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மே மாதம் தேர்தல் முடிந்தபிறகு அரசியல் வானில் மிக பெரும் புரட்சி ம், மாற்றமும் ஏற்பட்டிருக்கும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அத்வானி பேசினார். அத்வானியின் ஆங்கில பேச்சை எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார்.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் வேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். பா.ஜனதா அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர், தமிழக தலைவர் இல.கணேசன், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கே.என்.லெட்சுமணன், தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் பலர் பேசினார்கள்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.