ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் அமைதிப் போராட்டம்

கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும்,

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் பலர் பேசினார்கள்.

இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.