மகாத்மா காந்தியின் உடைமைகளை ஏலம் எடுத்தார் மல்லையா

நியூயார்க்: மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் 1.80 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளார் விஜய் மல்லையா. காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம் உள்ளிட்ட 5 பொருட்கள் அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர் வசம் உள்ளது. இப்பொருட்களை நியூயார்க்கில் ஏலம் விடப் போவதாக இவர் அறிவித்தார். இதனை தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்கு ஓடிஸ் விதித்த நிபந்தனைகளை அரசு ஏற்க மறுத்தது.

திடீர் திருப்பம்: இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியாவுக்கு நன்கொடையாக தர விரும்புவதாகவும், ஏலத்தை ரத்து செய்யப் போவதாகவும் ஜேம்ஸ் ஓடிஸ் கூறியுள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது, காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைக்க சம்மதித்தேன். நான் முன்மொழிந்த நிபந்தனைகளை ஏற்க இந்திய அரசு சம்மதித்து விட்டது. இருந்தாலும், அது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.

காந்தியின் அஸ்தியும், அவர் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தமும் என்னிடம் உள்ளது.டில்லியில் உள்ள இர்வின் மருத்துவமனையில், காந்திக்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனை அறிக்கையும் என்னிடம் உள்ளது. மாணவர்கள் அமைதியாக நடத்திய போராட்டத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் அனுப்பிய டெலிகிராமும் உள்ளது.இவ்வாறு ஜேம்ஸ் ஓடிஸ் கூறினார்.அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஓடிசுடன் பேச்சு நடத்தியுள்ளனர். அதில், ஓடிசுக்கு எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால், அவர் காந்தியின் பொருட்களை ஒப்படைத்து விடுவார் என, கூறப்படுகிறது.

1.80 மல்லியன் டாலருக்கு ஏலம்: இதற்கிடையில், காந்தியின் பொருட்களை ஏலம் விட முடிவு செய்துள்ள நிறுவனம், அதற்கான குறைந்தபட்ச கேட்பு விலையாக ஒன்பது லட்சம் முதல் 13.5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயித்தது. ஏலத்தில் கிங்பிஷர் நிறுவன உரிமையாளர் விஜ‌ய் மல்லையா 1.80மில்லியன் டாலருக்கு காந்தியின் உடைமைகளை வாங்கினார். ஏலம் எடுக்கப்பட்ட பொருட்களை மல்லையா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படப் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.