‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (05.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நேற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி, முள்ளிவாயக்கால் , அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை முற்பகல் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள ஓமந்தைப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார்.

படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள வடக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கண்டிக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “வடக்கில் நிரந்தர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் பொலிஸ் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றார்
!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரையில் அந்நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் லண்டனில் பொதுநலவாய அமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது .

பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக் குழுவின் மாநாடு இலங்கையில் நடைபெற்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் , லண்டன்வாழ் தமிழர்கள் கலந்து கொண்டதாகவும் பி.பி.சி செய்தி சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது. தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களைச் சந்திப்பதனாலேயே அவர்களுக்காக குரல்கொடுக்கத் தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!

பாகிஸ்தானில் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியின் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலுக்கும், தங்கள் இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்று விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர் . பாகிஸ்தானில் லாகூர் நகரில் நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கெட் அணியின் மீது 12 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். .

இந்த தாக்குதலில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். 8 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இலங்கை அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு விமானத்தின் மூலம் தாயகம் திரும்பியது. கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் விடுதலைப்புலிகள் காரணமாக இருக்கலாம் என்று ஒரு செய்தி வெளியானது. பாகிஸ்தானின் லஷ்கர்தொய்பா தீவிரவாத இயக்கத்தோடு சேர்ந்து விடுதலைப்புலிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் விடுதலைப்புலிகள் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்த பேட்டியில் விடுதலைப்புலிகள் செய்தித் தொடர்பாளர் திலிபன், லாகூர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளோடு தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் தவறானவை என்று அவர் கூறினார்.

இலங்கை அரசு முற்றுகையிட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் எனும் செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கையையும் அவர் தங்கள் இயக்கம் நிராகரிப்பதாக தெரிவித்தார் . தமிழர் பகுதிகளில் கடும் உணவு தட்டுப்பாடு இருப்பதாக கூறும் அவர், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் , தங்களோடு தான் இருப்பதாகவும், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளும் உடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று நேற்று விஜயம் செய்து பார்வையிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்கள் மற்றும் வைத்தியசாலைகல் என்பவற்றுக்குச் சென்று மக்களை சந்தித்து நலன் விசாரித்ததோடு, அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்ததாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விசேட விமானம் மூலம் பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதுவர்கள் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹனவும் உடன் சென்றிருந்தார்.

மெனிக்பாம், காமினி வித்தியாலயம், காதிர்காமர் கிராமம் மற்றும் வவுனியா வைத்தியசாலை என்பவற்றுக்குச் சென்று அங்குள்ள மக்களினதும் நோயாளிகளினதும் நிலைமைகளை இவர்கள் அவதானித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர் .

வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடியதோடு அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தனர். வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.

வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார் .

வெளிநாட்டு தூதுவர்களின் விஜயத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியாவில் அரச வங்கியொன்றில் கடமைபுரியும் சிரேஷ்ட அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் ஆயுதமுனையில் கப்பம் கோரி ஆயுததரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் வங்கிக்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்த அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இருவரும் வங்கிக்கு திரும்பாத நிலையில் ஏனைய ஊழியர்கள் தேடிச் சென்றவேளையில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனினும் இவரையும் காணவில்லை. இது தொடர்பாக வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களை கடத்தியவர்கள் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு பணம் கொடுத்தால் இருவரையும் விடுதலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர
இதேவேளை வங்கி ஊழியர்கள் கடத்தப்பட்டமையினால் வங்கிச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் மனிதாபிமான தொண்டு பணியில் ஈடுபட்டுவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் புதுமாத்தளன் வைத்தியாலையில் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலினால் படுகாயமடைந்தோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிப்போரை செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் ஏற்றிவிட்டு திருப்பிக் கொண்டிருக்கையில் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த கே.விஜயராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
1997ம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து மல்லாவி பகுதியில் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரிவில் கடமையாற்றிவந்துள்ளர். தற்போது உதவி நிவாரணப் பணியாளராக கடமையாற்றிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு அத்துருகிரிய கொடகம பகுதியில் வெளிநாட்டு பிரஜையின் வீட்டில் தங்கிருந்த இரு பெண்கள் உட்பட 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்துள்ள வெளிநாட்டு பிரஜை அத்துருகிரிய காவற்துறையில் வசித்துவருகின்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாடு செல்லும் நோக்கத்திற்காக இவர்களின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் விடுதலை புலி உறுப்பினர்கள் என சந்தேகத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் பல முனைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் தொடர்ந்து கடுஞ்சண்டை நடைபெற்று வருகிறது என தேசிய பாது காப்பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இச்சண்டையில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.முன்னரங்க நிலையான கேவில் பகுதியில் நேற்றுமுன்தினம் 55 ஆவது படைப் பிரிவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் இரு தரப்புக்கும் இழப்புகள் ஏற்பட்டன. இச்சண்டையின் பின்னர் விடுதலைப் புலிகளின் மூன்று சடலங்கள் படையினரால் மீட்கப்பட்டன என்று அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பற்றிக்குளம் பகுதியில் காலை 9.45 மணியளவிலும், மாலை 5.30 மணியளவிலும் இடம்பெற்ற மோதல்களில் படைத்தரப்புக்கு சிறிதளவு இழப்பு ஏற்பட்டது என்று ஊடக மத்திய நிலையம் அறிவித்தது.
அதேவேளை, விசுவமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த 57ஆவது படைப்பிரிவின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் படைத்தரப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் அந்த நிலையம் தெரிவிக்கிறது.
நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் ஏற்பட்டன என்றும் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

போர் நிறுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதால் வன்னி மக்களை காப்பாற்ற நெதர்லாந்து அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை என்று அந்நாட்டின் வெளிவிவாகரத்துறை அமைச்சின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மார்த்தன் காபர் காம்ப் தெரிவித்துள்ளார் .
நெதர்லாந்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நேற்று அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி அரசின் கிறிஸ்தவ ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மார்த்தன் காபர் காம்ப்பினை சந்தித்து உரையாடினர்.
நெதர்நலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 3:00 மணி வரை இச்சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின் போது மாணவர்களால் வன்னி மக்களின் இன்றைய அவலநிலை தொடர்பாக கூறப்பட்ட விடயங்கள் பலவற்றையும் அவதானமாக கேட்டறிந்து கொண்ட மார்த்தன் காபர் காம்ப்,
நெதர்லாந்து அரசானது ஐரோப்பிய ஒன்றித்தின் ஊடாக உடனடி போர்நிறுத்தத்தை மகிந்த அரசிடம் சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்தியதாகவும் ஆனால் அதனை மகிந்த அரசு நிராகரித்து விட்டதாகவும் இதனால், நெதர்லாந்து அரசானது எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருப்பதாக தமிழ் மாணவர்களிடம் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த அரசானது உணவையும் மருந்தையும் வன்னி மக்களுக்கு செல்ல விடாமல் தடுத்துள்ளதையும் இதனால், வன்னியில் உள்ள மக்கள் பலர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாகவும் பலர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதால் அவசர மனிதாபிமான உதவிகளான உணவு, மருந்துகளை அந்த மக்களுக்கு உடன் அனுப்புவதற்கு உதவி புரியுமாறும் மாணவர்களால் கேட்கப்பட்ட போது,
மகிந்த அரசு ஒத்துழைக்க மறுப்பதாகவும் உணவுகளைக் கொண்டு செல்லும் தங்கள் உறுப்பினர்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்பதால் தங்களால் தற்போதைய நிலையில் எதுவும் செய்ய முடியாது எனவும் காபர் காம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையை 138 வருடங்களாக ஆட்சிபுரிந்த நெதர்லாந்து அரசிற்கு (டச்சுக்காரர்) தற்போதைய போரை நிறுத்தி தமிழின அழிப்பை நிறுத்தும் தார்மீகப் பொறுப்பு உண்டு எனவும் தமிழ் மாணவர்களால் இங்கு வலியுறுத்தப்பட்டது.
ஆனால், மகிந்த அரசை பணியவைக்க முடியாத நிலையில் நெதர்லாந்து அரசு உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளதால், தாயகத்தில் உள்ள மக்களுடன் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களும் இணைந்து தமது சொந்தக்காலில் போரை வென்றெடுத்து தமிழர்களுக்காக தனியரசை நிறுவினால் மட்டுமே தமிழ்மக்கள் பாதுகாப்பாக வாழலாம் எனவும் இது தவிர வேறு வழி எதுவும் எமக்கு தெரியவில்லை என சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் மாணவர்கள் தமது கருத்தினை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த நாட்டில் 30 வருடங்களாக வேரூன்றியிருக்கும் புலிப் பயங்கரவாதம் நாளையோ, நாளை மறுதினமோ அல்லது இன்னும் ஓரிரு நாள்களிலோ முற்றாக அழிந்துவிடும் என்று அரசு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தது.
புலிகளின் கதை முடியவுள்ள நிலை யில் அரசு யுத்தநிறுத்தம் ஒன்றுக்குச் சென்று மீண்டும் படுகுழியில் விழத் தயாரில்லை என்று அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேர ணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட இந்நாட்டு மக்கள் யுத்தத்துக்கு முழு ஆதரவையும் வழங்கி வருகின்றனர். சில சக்திகள் இதற்கு எதிராகச் செயற்படுகின்றன.
ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக நாம் செயற்படமாட்டோம். அந்த அடிப்படையில்தான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் எமது படை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.மரணத்தின் இறுதித் தறுவாயில் இருக்கும் புலிகள் மிகக் கீழ்த்தரமாக செயற்படுகின்றனர். இந்த இறுதி நேரத்தில் கூட புலிகள் இந்த நாட்டுக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தலாம்.
புலிகளின் யுத்த விமானங்கள் எம்மால் அழிக்கப்பட்டதன் மூலம் புலியின் இறுதிச் சிறகும் உடைக்கப்பட்டுள்ளது.
புலிகள் மூவின மக்களுக்கும் தொல்லை கொடுக்கின்றனர். அரசு தமிழர்களைக் கொலை செய்கின்றது என்று புலிகள் சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்கின்றனர். அது முற்றிலும் பொய்யானது. மக்கள் மத்தியில் ஒழிந்துகொண்டுதான் புலிகள் இப்பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.
தொண்டர் நிறுவனங்களுக்கு உண்மை தெரிந்தும் கண்மூடித்தனமாக அவை செயற்படுகின்றன. அந்நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பொய்ப்பிரசாரம் செய்கின்றன.
அரசு படுகுழியில் விழாது
இப்போது புலிகள் யுத்தநிறுத்தத்தைக் கோருகின்றனர். யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது அதைப் புலிகள் எத்தனை தடவைகள் மீறினர் என்று எமக்குத் தெரியும்.
யுத்தநிறுத்தத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஆயதங்களைக் களஞ்சியப்படுத்தியிருந்தனர். அவற்றை எமது படையினர் கைப்பற்றினர். புலி பலவீனமடையும் போதெல்லாம் இவ்வாறு யுத்தநிறுத்தத்தைக் கோருவது சாதாரண ஒன்று.
புலிகளின் சுபாவத்தை உணர்ந்து அரசு யுத்தநிறுத்தம் ஒன்றுக்குச் சென்று மீண்டும் படுகுழியில் விழாது. யுத்தநிறுத்தம் ஒன்றுக்குச் சாத்தியமே இல்லை.
புலிகளை யுத்தம் மூலம் தோற்கடிக்கும் பொறுப்பைப் படையினரிடம் ஒப்படைத்து விட்டு நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயற்படவேண்டும்.
30
வருடங்களாக வேரூண்றிப் போயுள்ள பயங்கரவாதத்தை நாளையோ, நாளை மறுதினமோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களிலோ முற்றாக ஒழித்துவிட முடியும் என்றார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மனித உரிமைகள் மீறப்படுவதாக அன்று ஜெனிவாவுக்குச் சென்றவரின் ஆட்சியிலேயே இன்று மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு ஜெனிவாவுக்கு மட்டுமல்ல, நரகத்திற்கும் சென்று போராடுவேன் என்று .தே.. எம்.பி . ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.

எனது செயற்பாட்டினால் அரசாங்கம் கோபமடைந்து என்னைப் பழிவாங்கினாலும் நான் பயப்பட மாட்டேன் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிமை நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது :

“உயிரிழந்த படையினரின் விதவை மனைவிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மருந்துப் பொருட்கள் இல்லை என்பதை நாம் சுட்டிக் காட்டியதை அடுத்து இந்தியா மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவும் அனுப்பியுள்ளது. எமது கோரிக்கைக்கு இணங்கி மருந்து பொருட்களை அனுப்பிய இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு .தே. . நன்றி தெரிவிக்கின்றது. ஹோம்ஸ் என்னதான் கூறினாலும் உண்மையான நிலைமையினை அவர் அறிந்திருப்பார். அரசாங்கத்திடம் என்ன அரசியல் தீர்வு இருக்கின்றது?ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை முன்வைத்தால் அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். மனித உரிமை மீறல் தொடர்பில் அன்று பேசியவர்களின் இன்றைய ஆட்சியில் என்ன நடக்கின்றது. ஹெஜிங் , மின்சாரம், தண்ணீர் கட்டணங்களைக் குறைக்குமாறு நீதிமன்றம் சென்ற தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படை வீரர்களுக்கு 80 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுமென மஹிந்த சிந்தனையில் உறுதியளிக்கப்பட்டது. எனினும் அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

யுத்த வெற்றிகளை நிரந்தர வெற்றிகளாக்குவதே இன்றுள்ள சவாலாகும். பிரச்சினைக்கு 13 ஆவது அரசியலமைப்புக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்குத் தயார் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார் . எனினும் இவ்வாறு செயற்படுவதற்கு அரசு தயாரில்லை என்பதையே காண முடிகின்றது. வவுனியா வைத்தியசாலைக்கும் மன்னார் ஆயர் இல்லத்திற்கும் செல்வதற்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கு சென்று வருகின்றார்.

பரம்பரை பரம்பரையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்ந்த மக்களை அரசு வவுனியாவில் ஏன் குடியேற்றுகின்றது? பலாத்காரமாக மனசாட்சிக்கு விரோதமாக இக்குடியேற்றம் இடம்பெறுகின்றது. வட, கிழக்கைத் தவிர வேறு பல இடங்களில் தமிழ் மக்கள் வாழ்வதாகப் பிரதமர் கூறுகின்றார். உண்மைதான். ஆனால் அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா ? பயத்துடனும் சந்தேகத்துடனும் தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மக்களுக்கு யுத்த மரண அச்சத்தை அரசு வழங்கக் கூடாது. தேசிய பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய உணர்வை வழங்க வேண்டும். அப்போது தான் நாட்டில் சமாதானம் ஏற்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டமீட்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவிகள் இருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் 24 ஆம் திகதியும் இன்னுமொருவர் 25 ஆம் திகதியும் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இம்மாணவிகளில் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர். மாணவி உண்மையில் தற்கொலை செய்திருந்தால் மாணவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்.
சுருக்கில் தொங்கிய அந்த மாணவியின் கால்கள் நிலத்தில் முட்டிய படி இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே இது தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவசரகால சட்டத்தின் பேரில் கடத்தல்கள், கப்பம் பெறுதல், சுற்றிவளைப்புகள், கைதுகள் தான் இடம்பெறுகின்றது. மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளன. அவசரகாலச் சட்டத்தின் தாக்கத்தை மூவின மக்களும் அனுபவிக்கின்றனர்.
கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகக் அரசு கூறுகின்றது. ஆனால், அங்கு மக்களின் சுதந்திரம் இழக்கப்பட்டு விட்டது. தற்போது கிழக்கில் அபிவிருத்தி என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது . வடக்கின் நிலையோ இன்னும் படுமோசம். அங்கு மக்கள் கும்பல் கும்பலாக தினமும் கொல்லப்படுகின்றனர்.
தென்பகுதியில் கூட காணமல் போவோர் கடத்தப்படு?வாரின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனை அரசினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளே உறுதிப்படுத்துகின்றன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் ஊடகங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கியத் தேசியக் கட்சின் எம்.பியான தயாசிறி ஜயசேகர, அந்த அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகசுடர் ஒளி“, “உதயன்ஆசிரியர் வித்தியாதரன் கைது செய்யப்பட்ட முறை குறித்து தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற் றிய போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
சுடர் ஒளி“, “உதயன்ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் என்று முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்று அரசு அறிவித்தது.
கைது செய்வது இப்படித்தானா? ஒருவரைக் கைது செய்வதென்றால் அதற்கு ஒழுங்குமுறை இருக்கிறது. கைது செய்ய வருபவர்கள் முதலில் தம்மை அடையாளம் காட்டி, கைது செய்வதற்கான காரணத்தையும் கூறவேண்டும். ஆனால் வெள்ளை வானில் சென்று கடத்தல் பாணியில் இழுத்துச் சென்று விட்டு, பின்னர் கைது என்று கூறுவது ஏற்க முடியாதது.
வித்தியாதரனுக்கு புலிகளுடன் தொடர்பு இருந்தால் அது குறித்து உரியமுறையில் விசாரிக்கலாம். ஆனால் அதற்காக சட்டத்துக்கு மாறாக அவரைக் கைது செய்து இழுத்துச் செல்வது முறையல்ல. அரசு காட்டுச்சட்டம் நடத்துகின்றது போலிருக்கிறது.
ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டிய ஊடகத்துறை அமைச்சரே வித்தியாதரன் கைது செய்யப்பட்ட முறையை நியாயப்படுத்தியுள்ளார். இதன் மூலம், வெள்ளை வான் சம்பவங்களை அரசு ஏற்றுக்கொள்கின்றது என்ற கருத்து வெளிப்படையாகின்றது என்று தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக் குருமாருக்கு தனியான முகாமை அமைப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதியை பெற்றுக் கொடுத்தமைக்காக சர்வதேச இந்து மதபீடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அண்மையில் சமூக அபிவிருத்தி சமூக நலன்புரி அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் கே .என்.டக்ளஸ் தேவானந்தாவை சர்வதேச இந்து மத பீடத்தைச் சேர்ந்த பாலரவிசங்கர குருக்கள், ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா, பா.சிவநேசசர்மா, .பாலச்சந்திர சர்மா ஆகியோர் இடம் பெயர்ந்த இந்து குருமார்கள் இடர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினர் .
போரினால் இடம் பெயர்ந்த குருமார்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் முகாம்களில் தமது சமயப்பாரம்பரியங்களை கடைப்பிடிக்கவும் உணவு விடயத்திலும் பல இடைஞ்சல்களை எதிர்நோக்குகின்றனர் . இதனால் அந்தண குருமார்களுக்காக தனியான முகாம்களை அமைப்பதன் மூலம் இதனை நிவர்த்தி செய்யலாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் சர்வதேச இந்து மத பீடம் சமர்ப்பித்திருந்தது. இதன் பயனாக இதற்கான அனுமதியினை அமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு இலங்கையின் உள்நாட்டுப் போர் அனுபவம் உதவியாக இருந்தது என்று இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன கூறியுள்ளார் . நேற்று அதிகாலை நாடு திரும்பிய ஜயவர்த்தன, செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது : “தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நாங்கள் பழகிவிட்டோம். துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பை அடிக்கடி பார்த்திருக்கிறோம்.

இந்த உள்நாட்டுப் போர் அனுபவம்தான் எங்களுக்குக் கைகொடுத்தது . அதனால்தான் தீவிரவாதிகள் சுடத் தொடங்கியதும் உடனடியாக சீற்றுகளுக்கு அடியில் மறைந்து கொண்டோம். இதன்போது பஸ் சாரதி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பஸ்ஸைத் தொடர்ந்து வேகமாக ஓட்டினார். இதனாலேயே எம்மால் உயிர் தப்ப முடிந்தது.

நான் பாதுகாப்பு குறித்த விசேட ஆய்வாளர் அல்லர். எனினும், ஒருநாள் தொடரை விடவும் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் பயணமானபோது பாதுகாப்பு குறித்து சிக்கல் இருந்ததாகத் தெரிந்தது . இது குறித்து கிரிக்கெட் நிர்வாகிகளே ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் . எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் வீரர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது போன்ற தாக்குதல் சம்பவம் எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம்.” இவ்வாறு அவர் கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது லாகூர் நகரில் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடனான சந்திப்பின் போதே பாகிஸ்தான் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் . இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், பாகிஸ்தானில் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதையடுத்து , அங்கு அவசர விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், வெளி விவவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரியுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இச்சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் துறையின் எதிர்கால வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி, வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் உயன்கொட உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர் .

அதேவேளை, அமைச்சர் போகொல்லாகம, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்னர் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தினர் .

ஜனாதிபதியுடன் நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று பாகிஸ்தானில் இடம் பெற்ற சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் அன்றிரவே அந்நாட்டுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீர்கொழும்பு மாநகரசபையின் முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்களான ஸ்ரான்லி பெர்னாண்டோ , கமிலஸ் பெரேரா, தாசன் குரூஸ், தீபால் பெரேரா ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ளனர்.
இதேபோல கிறிஸ்ரி பெர்னாண்டோ மற்றும் மார்க் சுஜித் ஆகிய இரு மாநகர சபை .தே..உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்துள்ளனர்.
பிரதியமைச்சர் சந்த குணரட்ன முன்னிலையில் இவர்கள் இணைந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் நிலைமைகளால் தாம் ஆளும் தரப்பில் இணைந்து மக்களுக்கு சேவையாற்றவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள மத்திய கல்லூரியில் காதலர் தினத்தை கொண்டாடியதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குள்ள கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய அதிபர் மாணவர்களிடையே காதலைத் தூண்டிவிட்டு அவர்களின் கல்வியைப் பாழாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இக்கல்லூரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது தொடர்பாக கல்வியமைச்சும் விசாரணைகளை நடத்திவருகிறத
!!!!!!!!!!!!!!!!!!!!!
வங்கியில் நிரந்தர வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்காக அந்த வங்கிக்கு 22 வருடங்களின் பின் சென்ற யுவதிக்கு அவரின் பெயரில் அவ்வாறான கணக்கு எதுவுமில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5 சிறுமியாக இருந்த போது அரச வங்கி ஒன்றில் 5 ஆயிரம் ரூபாவை நிரந்தர வைப்பிலிட்ட லக்ஷ்மி சந்திம மதுவந்தி திஸநாயக்க என்ற 27 வயது யுவதியே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
1981 ஆம் ஆண்டு சிறுவர் நிரந்தர வைப்பு கணக்கு ஒன்றை தனது பெயரில் திறந்து தனது தந்?யார் 5000 ரூபாவை வைப்பிலிட்டார் எனவும் தற்போது அத்தொகை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 365 ரூபாவாக உயர்ந்துள்ளது. எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வங்கியில் அவ்வாறான ஒரு கணக்கு இல்லையெனவும் அதிகாரிகளால் இந்த யுவதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, வங்கியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேப மனுவில் இவ்வாறான கணக்கு இல்லையென மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேல் விசாரணையை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் அஜசானி ஜயசேன ஜூன் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வட்ட நிர்வாகி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வருபவர் சிறீதர் (வயது 33). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 99 ஆவது வட்ட அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.
நேற்று புதன்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்நாம் தமிழர்நடைப்பயணத்தில் கலந்து கொண்ட இவர், பின்னர் பிற்பகலில் வீட்டிற்கு திரும்பினார். 2:30 நிமிடமளவில் மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்தார். வெளியில் சென்றிருந்த அவரின் மனைவி லக்ஸ்மி வீட்டிற்கு வந்தபோது சிறீதர் தீப்பற்றி எரிவதைக் கண்டு அலறினார்.
அப்போது அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஊசலாட்டமான நிலையில் சேர்க்கப்பட்ட சிறீதருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
‘நாம் தமிழர்’ நடைப்பயணத்தில் முழு மனதோடு கலந்து கொண்ட சிறீதர், பிற்பகலில் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார். 2:30 நிமிடமளவில் அவர் தீக்குளித்ததாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம். ஈழத் தமிழர் பிரச்சினைக்காகத்தான் சிறீதர் தீக்குளித்தார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நடுவண் சென்னை மாவட்ட அமைப்பாளர் வீரமுத்து கூறினார்.
தீக்குளித்த சிறீதருக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளனர். இவர் அபிராமி திரையரங்க வளாகத்தில் உள்ள ஈருளி நிறுத்துமிடப் பணியாளராக வேலைபார்த்து வருவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”ஈழத் தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அரசு போரின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை குறுகிய நிலப்பரப்பிற்குள் நிறுத்தியுள்ளது. அதில் 3 லட்சம் தமிழர்கள் பட்டினியாலும் , நோயினாலும் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் ராஜபக்சேயின் இலங்கை அரசு இன அழிப்பு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவதிப்படும் ஈழத்தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.

இலங்கை இன அழிப்பு போரில் ஈடுபட்டு வருவதை உலக நாடுகள் உணர்ந்தும், ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா மட்டும் தயக்கம் காட்டி வருகிறது. இப்பொழுதுதான் போரை நிறுத்த வேண்டும் என்று பேச துவங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். இந்த மாற்றம் பேச்சளவில் மட்டுமல்லாது செயலளவிலும் இருக்க வேண்டும். இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்துகளை விமானம் மூலம் முல்லைத்தீவு மக்களுக்கு தினமும் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இலங்கை அமைதிக்காக இங்கிலாந்து பிரதமர் நியமித்த விசேஷ தூதரை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். அதேபோல் . நா சபையில் இலங்கை பிரச்சனையை எழுப்பி சர்வதேச அளவில் மட்டுமல்லாது சர்வதேச விளையாட்டிலிருந்தும் விலக்கி வைக்க வேண்டும். அதன் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பா.. பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும். சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தில் வழக்க‌றி‌ஞ‌ர்களை தாக்கிய காவல்துறையினரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி. போட்டியிடுமா என்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு விஜயகாந்த் அறிவிப்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு அலட்சியப் போக்கை காட்டுவதாகவும், மத்திய அரசைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தால், அதில் தே.மு.தி. முதல் கட்சியாக இருக்கும் என்றும் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் அறிவித்தார். ஆனால், அவரது கோரிக்கையை எந்தக் கட்சியும் ஏற்கவில்லை .

இந்நிலையில், தே.மு.தி..வை தன்பக்கம் இழுப்பதற்கான முயற்சியில், காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ‘மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்’ என்று விஜயகாந்துக்கு அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் மறைமுகமாக அழைப்பு விடுத்தார்.

கடந்த 10 நாட்களாக , வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். நேற்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் நேற்று ஓய்வு எடுத்த விஜயகாந்த் , இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு முடிவை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தில் (எ‌ன்.‌ஜி.) காவல‌ர்க‌ள், வனத்துறையினர், தீயணைப்பு படையினர் ஆகிய அனைத்து சீருடைப் பணியாளர்களும் சேரலாம் என்று அ‌‌ச்ச‌ங்க‌ த‌லைவ‌ர் கோ.சூரியமூர்த்தி அறிவித்துள்ளார்.

சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌ர், சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தில் வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கும், காவ‌ல்துறை‌யினருக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவம் அரசுக்கு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக என்.ஜி.. சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். காவல‌ர்க‌ள்வ‌க்க‌றிஞ‌ர்கள் மோதல் சம்பவத்தை பிரச்சனையின் அடிப்படையில் அணுகாமல் அரசியல் நோக்கில் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 13 லட்சம் அரசு ஊழியர்கள் 6 கோடி மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் ஒரு லட்சம் காவல‌ர்களும் அடங்குவர். மணல் கொள்ளைகளை தடுக்கும் அதிகாரிகள் லாரி ஏற்றி கொல்லப்படுகிறார்கள். காடுகளில் சந்தனம், செம்மரங்களில் தீவைத்துவிட்டு அந்த பழியை வனத்துறையினர் மீது போடுகிறார்கள். இதுபோன்று அரசு ஊழியர்கள் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது . வழ‌க்க‌றிஞ‌ர்களும் மக்கள் பணியில்தான் ஈடுபட்டுள்ளனர். அவர்களிலும் அரசு வழ‌க்க‌றிஞ‌ர்கள் உள்ளனர். எனவே, இதை இரு பிரிவினருக்கு இடையிலான ஒரு மோதலாக கருதக்கூடாது .

காவல‌ர்க‌ள் புதிதாக சங்கம் அனுமதிப்பதற்குத்தான் அனுமதி கிடையாதே தவிர ஏற்கனவே உள்ள என்.ஜி.. சங்கத்தில் அவர்கள் உறுப்பினராக சேர சட்ட ரீதியாக எவ்வித தடையும் கிடையாது. கடந்த 3.9.1924 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை எண் 625-இன் படி, காவல‌ர்க‌ள், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகிய அனைத்து சீருடைப் பணியாளர்களும் என்.ஜி.. சங்கத்தில் உறுப்பினராக சேரலாம். திடீரென்று காவல‌ர்களை ஏன் சங்கத்தில் சேர்க்கிறீர்கள் என்று கேட்கலாம். அதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை, அறிவித்து இருக்கிறது. சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது .

இந்த மாநிலத்தில் காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வா‌தி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கா‌ங்‌கிர‌ஸ் கேட்டது. ஆனால் அ‌ந்த தொகுதிகளை கொடுக்க சமாஜ்வா‌தி முன்வராததா‌ல் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த நிலையில்திடீரான சமா‌ஜ்வாடி க‌ட்‌சி 62 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

இது பற்றி உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ரிதா பகுகுணா ஜோஷி கூறுகையில், “நாங்கள் தனித்து போட்டியிடுவோம்என்றார் .

இந்த நிலையில், 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை நேற்று காங்கிரஸ் அறிவித்தது .

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரேபரேலி தொகுதி வேட்பாளராகவும், ராகுல் காந்தி அமேதி தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறுகையில், “உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சமாஜ்வா‌தி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எங்கள் கதவு திறந்தே இருக்கிறதுஎன்றார்
!!!!!!!!!!!!!!!!!!!
A.‡.˜.L. RÛXÛU›XÖ] iyP‚›¥ U.‡.˜.L. U¼¿• CP‰NÖ¡ LypL· CP• ÙT¼¿·[]. LP‹R ÚRŸR¦¥ ÚTÖyz›yPÛR «P C‹R RPÛY i|R¥ CPjL¸¥ ÚTÖyz›P ÚY|• GÁT‡¥ C‹R LypL· ˆ«WUÖL E·[].

C‹‡V L•ïÂÍ| Lyp LP‹R ÚRŸR¦¥ ÚLÖÛY, ÙRÁLÖp BfV C£ ÙRÖh‡L¸¥ ÚTÖyz›y| ÙY¼½ ÙT¼\‰. C‹R RPÛY i|RXÖL J£ ÙRÖh‡›¥ ÚTÖyz›P ÚY|• GÁ¿ C‹‡V L•ïÂÍ| Lyp «£•”f\‰.

YPÙNÁÛ], ‡£”Ÿ, SÖÛL BfV 3 ÙRÖh‡LÛ[ A.‡.˜.L.«P• ÚLyL C‹‡V L•ïÂÍ| Lyp ˆŸUÖ†‰·[‰. CR¼h UÖŸopÍy L•ïÂÍ| Lyp• BRW° ÙR¡«† ‰·[‰.

C‹‡V L•ïÂÍ| Lyp NÖŸ‘¥ YPÙNÁÛ] ÙRÖh‡›¥ UÖŒX ÙNV XÖ[Ÿ RÖ.TցzVÁ ÚTÖyz›|YÖŸ GÁ¿ ÙR¡VY‹‰·[‰.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

‡£”Ÿ ÙRÖh‡›¥ rTWÖVÁ, SÖÛL ÙRÖh‡›¥ ˜Á]Ö· G•.‘. ÙN¥YWÖÇ Œ¿†RT|YÖŸL· GÁ¿ ÙR¡f\‰.


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில், மன்மோகன் சிங் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன .

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது லாகூரில் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கும் தாக்குதல் , பாகிஸ்தானின் ஸ்வாத் எல்லையில் தாலிபான்கள் பரவியிருப்பது, வங்கதேச துப்பாக்கிப் படையினர் தாக்குதல், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் போன்றவை காரணமாக அண்டை நாடுகளில் சுமூக நிலை இல்லை என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.

எனவே பிரதமர் மன்மோகன் சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால், தெற்காசியாவில் பாதுகாப்பு நிலைமை பற்றி பேசுகையில் கவலையை வெளிப்படுத்த நேரிடும் என்பதால், அவரை மீண்டும் மாநிலங்களவையில் இருந்தே தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அண்மையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகையில், மக்களைச் சந்தித்து வெற்றிபெறாமலேயே அவர் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் பதவி வகிப்பவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவராக இருத்தல் வேண்டும் என அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அத்வானி வலியுறுத்தியிருந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள என். கோபாலசாமியின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 20ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பு ஏற்பார்.

தற்போது நவீன் சாவ்லா தேர்தல் ஆணையராக உள்ளார்.

நவீன் சாவ்லாவை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தற்போது லக்னோவில் நவீன் சாவ்லா சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நவீன் சாவ்லா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி, அவரை பணியில் இருந்து நீக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

ஆனால் கோபாலசாமியின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 12 தீவிரவாதிகள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது .

பாகிஸ்தானின் லாகூரில் கடாவி விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற 5 காவலர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் காவல்துறையினர் நடத்திய தேடுதல்வேட்டையில் 24 பேர் பிடிபட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் 20லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள். எனினும், இவர்களில் எவரும் முக்கியமான குற்றவாளிகள் அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவ்வருடத்திற்கான இராணுவச் செலவினத்தை 14.9 வீதத்தால் அதிகரித்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்நிதி சம்பள அதிகரிப்பு மற்றும் நவீன மயமாக்கல் என்பவற்றுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு , அனர்த்த நிவாரண உதவி போன்ற துறைகளில் தரமான கட்டமைப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுமென இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுயபாதுகாப்புக்காகவே சீன இராணுவம் பலப்படுத்தப்படுவதாகவும் இதனால் எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லையென மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட தொகையை விட சீனாவின் பாதுகாப்பு செலவினம் மிகவும் அதிகமானதென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதனை நிராகரித்துள்ள சீனா இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லையெனத் தெரிவித்துள்ளது .
சீன பாராளுமன்றத்தின் வருடாந்த கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னராக இப்புதிய இராணுவ வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக சீனாவின் இராணுவச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அயல்நாடுகளும் அமெரிக்காவும் எச்சரிக்கையுடன் அவதானித்து வருவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜெருசலேம்: இஸ்ரேலில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அமெரிக்கா மிகவும் உறுதியான ஆதரவை வழங்குமென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார் .
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக மத்திய கிழக்கிற்கு முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ள ஹிலாரி அந்நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
இஸ்ரேலில் அடுத்த அரசாங்கத்தை அமைக்குமாறு அமெரிக்காவின் முக்கிய கொள்கைகளை எதிர்க்கும் வலதுசாரிக் கட்சித் தலைவர் பெஞ்சமின் நிடன்யாகுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஹிலாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் நீண்டகால எதிரி நாடான சிரியாவுக்கு பேச்சுக்களுக்காக இரு அமெரிக்க அதிகாரிகளை அனுப்பப் போவதாகவும் ஹிலாரி அறிவித்துள்ளார்.
சிமொன் பெரஸுடன் சந்திப்புக்களை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஹிலாரி;
புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் இத்தருணம் நாட்டின் அரசியல் மிகவும் உணர்வுபூர்வமானது என்பது எனக்குத் தெரியும்.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை எப்போதும் வழங்கும். இஸ்ரேலியர்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு ஜனநாயக அரசுடனும் நாம் இணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலிய பாலஸ்தீன முரண்பாட்டுக்கான சிறந்ததொரு தீர்வாக பாலஸ்தீன அரசொன்றை அமைக்கும் முயற்சிகளை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுக்குமெனத் தெரிவித்துள்ளார் .
!!!!!!!!!!!!!
நியூயோர்க்:.நா. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய நீதிபதி கமல்ஜித் சிங் கார்வல் தெரிவாகியுள்ளார்.
.நா. பொதுச் சபையின் 192 உறுப்பினர்களில் 154 பேர் இவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் . இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகி 7 ஆண்டுகள் நீடிக்கும்.
கானா நாட்டைச் சேர்ந்த சோபியா அதின்யிரா, அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் பெய்ட்டர் ஆகியோரும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தலா 124 வாக்குகளையே பெற்றனர் .
7 இடங்களுக்கு 13 பேர் போட்டியிட்டனர். ருமேனியா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, லிதுவேனியா, பிரிட்டனைச் சேர்ந்த நீதிபதிகள் தோல்வியடைந்தனர்.
!!!!!!!!!!!!
சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர் மீது பிடி ஆணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
தார்பூரில் பொதுமக்கள் மீது அவரது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று தி ஹேக்கிலுள்ள நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
போர்க்காலக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என மொத்தம் 7 குற்றச்சாட்டுகளுக்கு அதிபர் பஷீர் பதிலளிக்க வேண்டும் என அனைத்துலக குற்றவியல் நீதிபதிகள் தீர்மானித்திருக்கிறார்கள் .
குறிப்பிட்ட இனங்கள் இலக்குவைத்து அழிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் போதாது என நீதிபதிகள் கருதியதால், இன ஒழிப்பு குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவதை அவர்கள் நிராகரித்தார்கள் .
நீதிமன்றத் தீர்ப்பை கண்டனம் செய்து சுடானிய பொதுமக்கள் தலைநகர் கார்டூம் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
பயங்கர குற்றங்களை இழைத்தால் அதிபர்கள் கூட சட்ட நடவடிக்கையிலிருந்து விதிவிலக்கல்ல என்பதை நீதிமன்ற முடிவு காட்டியிருக்கிறது என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைகள் இயக்கம் கூறியிருக்கிறது

!!!!!!!!!!!!!
கிழக்கு ஜெரூசலத்தில் பாலஸ்தீனர்களின் வீடுகளை அழிப்பதற்கான இஸ்ரேலிய திட்டங்களை அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கண்டனம் செய்திருப்பதோடு, அனைத்துலகப் பொறுப்புகளுக்கும், கடமைகளுக்கும் விரோதமான இந்தச் செயல் இஸ்ரேலுக்கு உதவப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன், ரமல்லாவில் நடந்த இணை செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்குப் பதிலளித்த கிளிண்டன் அவர்கள், இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா , இஸ்ரேலை விசனிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான நெருக்கடியை காலந்தாழ்த்தாமல் தீர்ப்பது அவசியம் என்று கூறிய திருமதி கிளிண்டன் அவர்கள், சமாதானத்தை விரும்புவோர் அனைவரும், இந்தப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
!!!!!!!!!!!!!!
sport
!!!!!!!!!!!!!!!!!
இத்தலியில் உள்ள பெர்காமோவில் நடைபெறும் .டி.பி. டென்னிஸ் சர்வதேச தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

ஜெர்மனி வீரர் பெனெடிக்ட் டார்ஷ் என்பவரிடம் பிரகாஷ் அமிர்தராஜ் 6- 7, 3- 6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார்.

இரட்டையர் பிரிவில் பிரகாஷ், அமெரிக்க வீரர் பிரன்டன் இவான்ஸ் என்பவருடன் ஜோடி சேர்ந்து விளையாடுகிறார்.

இவர்கள் இருவரும், இரட்டையர் பிரிவில் முதலாம் நிலையில் உள்ள சுவிஸ். – ஹாலந்து இணையை எதிர்கொள்கின்றனர்.

!!!!!!!!!!!!!!!!!!!
spain லினாரஸில் நடைபெறும் சர்வதேச செஸ் தொடரின் 10 வது சுற்று ஆட்டத்தில், உலக சாம்பியன் விஸ்வ நாதன் ஆனந்திற்கும், கியூபாவின் டொமிங்கேயிற்கும் நடைபெற்ற 10 வது சுற்று ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இருப்பினும் மற்ற வீரர்கள் பங்கேற்ற 10 வது சுற்று ஆட்டத்தின் முடிவுகளும் சோபிக்கவில்லை என்பதால் ஆனந்த் மீண்டும் 3 வது இடத்திற்கு வந்துள்ளார்.

செஸ் கிராண்ட் ஸ்லாம் என்ற தர நிலையில் இருக்கும் இந்த தொடரில் இன்னமும் 4 சுற்றுக்கள் மீதமுள்ளன.

உக்ரைன் வீரர் இவான்சுக்குடன் டிரா செய்து ரஷ்ய வீரர் க்ரிஷூக் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

ஆனந்த், கார்ல்சன், அரோனியன் ஆகிய மூவரும் 5 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளனர்.

ஆட்டத்தின் 26ஆவது நகர்த்தலில் ஆனந்தும், டொமிங்கேவும் ராணிகளை வெட்டுக் கொடுத்தனர். அதன் பிறகு 9 நகர்த்தல்களுக்குப் பிறகு ஆட்டம் டிரா ஆனது.

!!!!!!!!!!!!!!
C‹‡VÖ-ŒïpXÖ‹‰ A‚L· CÛPÚV SP‹R C£ 20 KYŸ ÚTÖyzL¸¥ 2 ÚTÖyzL¸¨ÚU Œïp XÖ‹‰ ÙY¼½ ÙT¼\‰.5 J£SÖ· ÚTÖyzL¸¥ ˜R¥ ÚTÖyz ÚS¼¿ ˜Á ‡]• ÚS‘VŸ SL¡¥ SP‹ R‰. C‡¥ C‹‡VÖ ATÖW ÙY¼½ ÙT¼\‰.

2-Y‰ J£SÖ· ÚTÖyz SÖÛ[ ÙY¦jPÁ SL¡¥ TL¥-CW° ByPUÖL SPef\‰.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

1euro =143.63 sl /64.36in
1 us $ = 114.10 sl /51.92in
1 swiss fr = 97.16 sl /44.22in
1 uk pound =161.43 sl/73.46 in
1 saudi riyal =30.42sl /13.84in

Leave a Reply

Your email address will not be published.