பாம்புகளுடன் விளையாடும் சிறுவர்கள் : தந்தை பீதி

இந்தூர்: விளையாடுவதற்கு விஷத் தன்மையுள்ள பாம்புகளை கேட்கும் மகன்களால் கதிகலங்கியுள்ளார் ம.பி.,யை சேர்ந்த தந்தை ஒருவர். மத்திய பிரதேச மாநிலம், தன்வந்திரி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நீலிஸ் சோலாங்கி. இவருக்கு 6 வயதில் அனுரங் மற்றும் 2 வயதில் கான்ஹா என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் விஷமிக்க பாம்புகளை தங்களின் சிறந்த நண்பர்களாக நினைகின்றனர். இதனால், விளையாட பாம்புகளை வாங்கி தரும்படி, நீலிசிடம் கேட்டு வருகின்றனர்.

இது குறித்து, நீலிஸ் சோலங்கி கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன் திருவிழா நேரத்தில், பாம்பு வித்தகர் ஒருவர் எங்கள் வீட்டில் வந்து தங்கினார். அவரிடம் பழகிய சிறுவர்கள் பாம்புகளை விரும்ப ஆரம்பித்தனர். டிஸ்கவரி சேனலில் பாம்புகளை குறித்த படங்களை பார்த்து, இருவரின் விருப்பம் அதிகரித்தது. பாம்பு வித்தகரும், சிறுவர்களுக்கு விளையாட பாம்பு குட்டிகளை சில நாட்களுக்கு கொடுத்து சென்றார். இதனால் சிறுவர்களுக்கு பாம்புகளின் மீதிருந்த பயம் மறைந்தது. தற்போது, பொம்மைகளுடன் விளையாட சிறுவர்களுக்கு விருப்பமில்லை. மாறாக பெரியவர்களுடன் விளையாடுவது போல, விஷமிக்க பாம்புகளுடன் விளையாடுகின்றனர். சிவனை போல பாம்புகளை தங்கள் தோள்களில் வைத்து கொள்கின்றனர். நல்ல பாம்பு, மலை பாம்பு, கரும்நாகம் என மிகவும் விஷமிக்க பாம்புகளுடன் விளையாடுகின்றனர். இது எங்களை ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால், இதுவரை எந்த பாம்பும் சிறுவர்களை சீண்டியதில்லை. இவ்வாறு நீலிஸ் சோலங்கி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.