வன்னியில் சிறிலங்கா படையினரின் இன அழிப்பு போரில் இன்றும் 45 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வரும் இன அழிப்பு நடவடிக்கையில் இன்றும் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 107 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 5:30 நிமிடம் தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 107 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.