புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நோர்வே பாராளுமன்றத்தில் விசேட கூட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நோர்வே பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் வெளிவிவகாரச் செயலாளர் ரேமன் ஹென்சன்கே தலைமையில் நாளை மறுதினம் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் வெளிவிவகார கமிட்டித் தலைவர் மெரீட் னைபெட் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையின் உள்விவகாரத்தில் நோர்வே பாராளுமன்றம் நேரடியாக தலையீடு செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.