சிவ்சங்கர் மேனன் மகிந்தவை சந்திக்க ஏற்பாடு

சிறிலங்காவுக்கு செல்லும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடுவார் என வெளிவிவகாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவுக்கு செல்லும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், வன்னிப் பகுதியில் தோன்றியுள்ள மனிதப் பேரவலம் குறித்து அரச தலைவர் மகிந்த ராஜபச்சவுடன் பேச்சுக்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து இந்தியாவின் கவனத்தை அவர் சிறிலங்கா அரசிற்கு தெரிவிப்பதுடன், தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கான அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தொடரை தொடர்ந்து மகிந்தவை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பதாக முன்னர் திட்டமிட்டப்பட்டிருந்தது.

எனினும், இறுதி நேரத்தில் முகர்ஜி தனது பயணத்தை இரத்துச் செய்ததனால் மகிந்தவுடனான சந்திப்பை மேற்கொள்வதற்கு சிவ்சங்கர் மேனன் சிறிலங்கா செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.