மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயார் – பிரான்ஸ்

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயார் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கோச்சுனர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரங்கள் குறித்து பிரான்ஸ் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயார்
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்திய போது பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் பொதுமக்கள் சிக்குண்டு இருப்பதாகவும், உடனடியாக பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு புலிகளுடனான ஆயுத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.