இடம் பெயர் மக்களை பார்வையிட அனுமதிக்கப்படாமைக்கான காரணம் என்ன?” ஜனாதிபதியிடம் சம்பந்தன் கேள்வி

இடம்பெயர்ந்து வாழும் மக்களை பார்வையிட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளதென கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

வன்னி மக்கள் பற்றியோ அல்லது வவுனியா மற்றும் மன்னார் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பற்றியோ தகவல்களை அறிந்து கொள்ள தமது கட்சி
உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் என்ற வகையில் தமது பிரதேச மக்கள் பிரச்சினைகளை நேரில்
கண்டறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர், சில அரசாங்க ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி சேவைகள் இரகசிய பொலிஸார்
தம்மிடம் மேற்கொண்ட விசாரணைகளை திரிபு படுத்தி செய்தி வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.