இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

சென்னை : “”நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள் புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்,” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள கேளூர் மேல்நிலைப்பள்ளியை தேர்வு மையமாக அறிவிக்க வேண்டும் என்று, சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அவர் பேசுகையில், “”பத்தாம் வகுப்பு பொதுத் தேர் வை 167 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வை 175 மாணவர்களும் எழுதுகின்றனர். பள்ளியில் மொத்தம் 1,280 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், தேர்வு மையமாக இந்த பள்ளி அறிவிக்கப்பட வில்லை. இதனால், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று பொதுத் தேர்வை எழுதுகின்றனர். “”காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்பவும், தற்போதுள்ள பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென்று தனி பள்ளியை ஏற்படுத்த வேண்டும்,” என்று குறிப் பிட்டார்.

இதற்கு, துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்கையில், “”கேளூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று தேர்வெழுதுகின்றனர். கேளூர் பள்ளியில் போதிய அள விற்கு மாணவர்கள் இருப்பதால், இந்த பள்ளியை தேர்வு மையமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். “”புதிய இடைநிலை ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்பட்டு விடும்,” என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.