துருக்கிய விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி

ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில், டேர்க்கிஷ் ஏயர் லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 9 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக டச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்தான்புல்லில் இருந்து வந்த இந்த விமானம் தரையிறங்க முயன்ற வேளை விபத்துக்குள்ளானது.

மூன்று பாகங்களாக இந்த விமானம் உடைந்து பிளந்தபோதிலும், அதில் தீப்பற்றவில்லை.

விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 130 பயணிகளும், சிப்பந்திகளும் இருந்துள்ளனர்.

பிளந்த பகுதி ஒன்றின் ஊடாக தான் விமானத்தில் இருந்து சுழற்றி வீசப்பட்டதாக உயிர் தப்பிய பயணி ஒருவர் துருக்கிய தொலைக்காட்சியில் கூறினார்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.