உலகநாடுகளின் வற்புறுத்தலுக்கு இலங்கை செவிசாய்க்காதது வருத்தமான விடயம்: பிரகாஸ்கரத்

இலங்கையில் போரை நிறுத்த நடுவணரசு வற்புறுத்த வேண்டும். உலக நாடுகளின் வற்புறுத்தலுக்கு பின்னரும் இலங்கை அரசு செவிசாய்க்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் கூறினார்.

மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் கோயம்பத்தூரில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இலங்கை பிரச்சினை பற்றி கூறுகையில்,

” இலங்கையில் நடைபெறும் போரில் தமிழர்கள் கொல்லப்படுவது, மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம். போர் நடைபெறும் பகுதியில் அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தக்கூடாது.

ஐ.நா. சபை, மற்றும் சர்வதேச நாடுகள் வற்புறுத்திய பின்னரும், இலங்கை அரசு போரை நீடித்து வருகிறது.
போரை நிறுத்த, இந்திய அரசு இலங்கைக்கு நிர்ப்பந்தம் விதிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கும் வகையில் 13-வது சட்டதிருத்தத்தை அந்த நாட்டு அரசு பின்பற்ற வேண்டும்.
இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்தி அரசியல் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ” என்றும் கூறினார்

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.