‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (24.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு மீண்டும் வருகை தரவுள்ளார். கொழும்பில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காவே அவர் வருகைதரவுள்ளார் என்று வெளிவிகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் 27 ஆம் ,28 ஆம் திகதிகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .

மாநாட்டு முடிவடைந்ததன் பின்னர் சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்ற போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருப்பதுடன் வலய நாடுகளுக்கு இடையில் பயங்கரவாதத்தை தோற்கடித்தல் , பொருளாதார, அரசியல் மற்றும் அபிவிருத்தி துறைகளை மேம்படுத்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்படவிருக்கின்றது.

அத்துடன் வடக்கின் தற்போதைய நிலைமை மற்றும் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உரிய வசதிகளின்றி பெரும் கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம். சமைத்து உண்பதற்கு மா, அரிசி என்பன வழங்கப்படுகின்ற போதும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை. குறுகிய பகுதியில் பெருமளவானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நோய்களும் ஏற்படும் நிலை காணப்படுகின்றது என்று வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மணிக்பாம், கதிர்காமர் நிவாரண க்கிராமத்தில் தங்கியுள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முகாமில் சுகாதார வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றது. குளிப்பதற்க பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலையும் காணப்படுகின்றது. எனவே உரிய வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து செய்தியாளர் குழுவொன்றினை நேற்று தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையம் வவுனியா மணிக்பாம், கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு அழைத்து சென்றிருந்தது. இந்தச் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

மணிக்பாம், கதிர்காமர் நிவாரணக்கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்க செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பொதுமக்கள் சமைத்து உண்பதற்கு அரிசி, பருப்பு, மா போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றது. ஏனைய பொருட்களை வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை . நாம் தொழிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. இடம் பெயர்ந்து வந்த எமக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவேண்டும். எமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு அப்பியாசக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு கொப்பிலேயே எட்டு பாடங்களையும் எழுதவேண்டிய நிலை காணப்படுகின்றது. பெருமளவானோர் தங்க வைக்கப்பட்டுள்ளமையால் குளிப்பதற்கு கூட பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. நாம் எங்கும் வெளியேற முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பொதுமக்களின் கருத்துக்கள் குறித்து வவுனியா செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸிடம் வினவப்பட்ட போது இடம் பெயர்ந்த மக்களுக்கு ஆரம்பக்கட்டமாக தற்போது இத்தகைய வசதிகளை வழங்கியுள்ளோம். தற்போதைய நிலையில் அதிகபட்சமாக வழங்கிகூடியவற்றை நாம் வழங்கி வருகின்றோம் என்று தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மேலும் 40ஆயிரம் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 1000 ஏக்கர் நிலத்தினை நாம் ஏற்பாடு செய்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2, 3 கிழமைகளுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கின்றோம் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் கூறியுள்ளார் .

வவுனியாவில் இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 13 நலன்புரி நிலையங்களிலும் போதியளவு சுகாதார வசதிகள் இல்லையெனவும் இங்கு தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதென்றும் மணிக்பாம் முகாமில் கடமையில் இருந்த வைத்திய உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் . முகாம்களுக்கு செல்வோர் தொண்டை கரகரப்புடன் கூடிய காய்ச்சலுக்க உள்ளாவதாகவும் உரிய சிகிச்சைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காவல்துறை இலச்சினையுடன் ஜீப் வண்டியொன்று கொழும்பின் வீதிகளில் சஞ்சரித்ததாகக் கிடைக்கப் பெற்றத் தகவலை அடுத்து கல்கிஸை காவல்துறை அதிகாரிகள் குறித்த வாகனத்தை கைது செய்துள்ளனர். காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன களுத்துறைக்கு செல்லும் போது குறித்த வாகனத்தை கண்டதாகவும் பின்னர் அவர் காவல்துறையினருக்கு வழங்கிய உத்தரவுகளுக்கு அமைய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தைக் கொண்டு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேல்மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் “மரம்’ சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார். இது குறித்து செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. மேலும் கூறுகையில்,நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டது. எனினும், மேல்மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதற்கு கட்சி தீர்மானித்திருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கட்சியின் தலைமையகத்தில் நேற்று கூடிய உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தில் கொழும்பு மாவட்டத்திலும் தனித்தே தேர்தலில் போட்டியிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தது.

இதற்கமைய களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மேல்மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரம் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டம் கிரிமிட்டியாவ பகுதியிலுள்ள ரத்மல்கஹஎல கிராமத்தில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரில் 11 பேரின் சடலங்கள் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டன.

உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் ஒரே குழியில் இந்த நல்லடக்கம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீற்றர் ஹெய்ஸ் மலைநாட்டுக்கு வியஜமொன்றை மேற்கொண்டுள்ளார்.

23 ஆம் திகதி முதல் 26 ஆந் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது இவ்வியஜத்தின் போது மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவார்.

அத்துடன் கண்டி திருத்துவக் கல்லூரி, அங்கவீனர்கள் மற்றும் குடும்பங்களுக்கான கல்வித் திட்டம், விக்டோரியா நீர்த்தேக்கம் போன்றவற்றைப் பார்வையிடுவார். பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் கண்டியில் நடைபெறவுள்ள கண்காட்சியினை ஆரம்பித்து வைப்பதுடன் அங்குள்ள ஹைட்ராமணி தொழிற்சாலைக்கும் விஜயம் செய்வார் என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாதென இராணுவத் தளபதி மேஜர் சரத் பொன்சேகா உறுதிபடத் தொவித்துள்ளார்.
புலிகளை முற்றாக அழித்து ஒழிக்கும் வரை மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாதெனவும்
அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவித உடன்படிக்கையும் செய்து கொள்ளப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.

இராணுவத் தளபதி மேலும் தெரிவிக்கையில், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த மனிதாபிமான நடவடிக்கையை உறுதியுடனும்; அர்ப்பணிப்புடனும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைளின் முன்னேற்றங்களிலிருந்து தாம் எந்தவித காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பான் கீ மூன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும்.

வன்னிப் பகுதியில் மோதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொண்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக அங்கு நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார் அவர்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனது கருத்தில் போர் நிறுத்தம் என்ற சொற்பதத்தினை பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

“இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போரியல் விதிகளையும் மதித்தல் வேண்டும். சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இதனை மதிக்க வேண்டும் .

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் மக்களை வெளியேறவிடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.

வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தராதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.
இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் நீண்டகாலப் போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வுகாண முடியாது. விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் . துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

ஜி.எஸ்.பி . பிளஸ் வரிச்சலுகைகளின் நீடிப்புக்கான விசாரணைகளுக்கு அரசு ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அனைத்துலகத்தின் மனித உரிமை விதிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பகுதியில் காவல்துறை மற்றும் விமானப் படையினர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் அப்பகுதியைச் சேர்ந்த 23 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர் அனைவரும் தமது அடையாளங்களை உறுதிசெய்யத் தவறியதுடன் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பாவுயவர்கள் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடி யிருப்பு நகரப்பகுதியை இராணுவத்தினர் முற்றுகையிட்டிருக்கின்றனர் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே படையினர் வசமாகியுள்ள பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த விடு தலைப்புலிகள் குழுவொன்றுடன் வற் றாப்பளை பகுதியிலும், புதுக்குடியிருப் புக்கு கிழக்கிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றன என்றும் இராணுவத் தலை
யகம் கூறியிருக்கின்றது.
இந்தச் சண்டைகளின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகளின் 5 cடலங்களையும் ஆயுதத் தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர் எனவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே கோம் பாவில் பகுதியில் அமைந்திருந்த விடு தலைப் புலிகளின் மண் அரணின் ஒரு தொகுதியை, இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு கைப்பற்றியுள்ளதாகப் பாது காப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது.
முன்னேறிச் செல்லும் இராணுவத்தின ருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை மேற்கொள்கின்றனர் எனவும் இரணைப்பாலை வரை மண் அரண் ஒன் றைப் புலிகள் இயக்கம் அமைத்துள்ளதா கவும் படைத்தரப்பில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
தற்போது புதுக்குடியிருப்பு நகரிலிருந்து 400 மீற்றர் தொலைவில் படை யினர் நிலைகொண்டுள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சட்ட மா அதிபர் சீ .ஆர்.டி.சில்வா ஆகியோர் அடங்கலாக குழுவொன்று மார்ச் மாதம் ஆரம்பத்தில் ஜெனீவாவுக்கு பயணமாகிறது.
ஜெனீவாவுக்கான இந்த பயணத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் உறுதிப்படுத்தினார்.
இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐ.நா. அமைப்பு உட்பட உலக நாடுகள் யாவும் கவலை வெளியிட்டுவரும் தருணத்திலேயே, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் இலங்கை சார்பான அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் விடுக்கப்படவுள்ளது.
அண்மையில் கூட நியூயோர்க்கில் பிரிட்டிஷ் பிரெஞ்சு தூதுவர்கள் இலங்கை நிலைவரம் தொடர்பாக கடும் கவலையை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா.மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ், அவரது அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்குமென அந் நாட்டுத் தூதுவர் ஜோன் சாவர்ஸ் தெரிவித்திருக்கிறார் .
இவற்றுக்கெல்லாம் இலங்கை அரசாங்கம் தரப்பில் பதிலளிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான மஹிந்த சமரசிங்கவின் அறிக்கை இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட பிரிவுக்கான அமர்வில் கலந்துகொள்ளவே ஜெனீவா செல்வதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அதற்கு அப்பால் ஐ.நா.மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் பற்றி கலந்து பேசவிருப்பதாகவும் கூறினார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்குக் கூட்டிவரப்பட்ட காயமடைந்த பொதுமக்களில் பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் கண்டி போதனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர் என்றும் மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலை ஆஸ்பத்திரியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார் .
திருகோணமலை ஆஸ்பத்திரியில் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. இதன் விபரம் வருமாறு;
பெப்ரவரி 1 தொடக்கம் பெப்ரவரி 19 வரை 500 பேர், பெப்ரவரி 20 28 பேர் , பெப்ரவரி 2145 பேர் , பெப்ரவரி 2211 பேர் , பெப்ரவரி 23 33 பேர்.
வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டோரின் பிந்திய நிலைவரம் வருமாறு;
கொழும்பு / கண்டி 68 பேர் , பொலனறுவை 171 பேர், கந்தளாய் 160 பேர், தம்பலகமம் 76 பேர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்றம் ஏப்ரலில் கலைக்கப்பட்டு ஜூலையில் பொதுத் தேர்தலொன்று நடத்தப்படக் கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
படை நடவடிக்கைகளின் பெறுபேறுகளினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தற்போது நிலைமைகள் சாதகமாக இருப்பதனால் இது பெரும்பாலும் நடைபெறக் கூடுமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது .
அத்துடன், அண்மையில் நடைபெற்று முடிந்த சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளும் அதேபோல் ஏற்கனவே நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவும் அரசாங்கத்துக்கே சாதகமாக அமைந்தமையானது இவ்வாறானதொரு நகர்வுக்கு காரணமாக இருக்கலாமென்றும் தெரிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாது, மேல் மாகாண சபையும் கலைக்கப்பட்டு தற்போது அதற்கான வேட்புமனு கோரல் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் மத்திய கொழும்பு பிரதேசத்தை தவிர களுத்துறை, கம்பஹா மாவட்டங்களென மேல் மாகாணத்தின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளே ஓங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.
மேல் மாகாண சபைக்கான வேட்பு மனுக் கோரல்கள் நாளை மறுதினம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் தேர்தல்கள் செயலகத்தினால் தேர்தலுக்குரிய தினம் அறிவிக்கப்படவிருக்கிறது. பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் மேல் மாகாண சபை தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம், எஞ்சியிருக்கும் ஊவா மற்றும் தென்மாகாண சபைகளை கலைப்பது பற்றி சித்திரை புத்தாண்டின் பின்னரே முடிவாகுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார் .
எனினும் யுத்த வெற்றிகளால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலொன்றை நடத்தினால் பெறுபேறுகளும் சாதகமாக இருக்குமென்பது அரசாங்கத்தின் கணிப்பீடாக இருக்கலாமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலைமையிலேயே பாராளுமன்றம் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் கலைக்கப்பட்டு ஜூலை மாதத்தில் பொதுத் தேர்லொன்று நடத்தப்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடனேயே முடிவுக்கு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ஜனாதிபதியொருவரது பதவிக் காலத்தில் 4 வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமென்பதற்கு அமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்படுகிறது .
இருப்பினும் அதற்கு முன்னதாக நடத்தப்படும் பொதுத் தேர்தல் முடிவுகளது சாதக பாதக நிலைமைகளைக் கொண்டே உரிய காலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவது பற்றி தீர்மானமாமென்று சுட்டிக்காட்டப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பாதுக்கை அயர் தோட்டம் குருதல பிரிவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு வசித்த 48 குடும்பங்களில் 33 குடும்பங்கள் அச்சம் காரணமாக வெளியேறியுள்ளன.
அதேநேரம், பாதுக்கை அயர் தோட்டம் குருதல பிரிவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கைகலப்பின் போது தோட்டத் தொழிலாளியான எம்.செல்வராஜ் (வயது 45) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால், இப்பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுகின்றது.
தனிப்பட்ட பகைமையைக் காரணம் காட்டி இத்தோட்டத்திற்குள் உட்புகுந்த பெரும்பான்மையான காடையர்கள் இங்குள்ள அப்பாவித் தமிழர்களை தாக்கியுள்ளனர். இதனால், ஒருவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களின் வைத்திய சேவைகளை முன்னெடுக்கவென, சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்களை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது.
இந்த மருந்துகள் ஏற்கனவே, முல்லைத்தீவில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் உட்பட வடபகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் வைத்திய சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார், 10 ஆயிரம் மக்களுக்கு 3 மாதகாலத்துக்குத் தேவையான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் .
!!!!!!!!!!!!!!!!!
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட நிலைபோலன்றி, ஊவா மாகாண சபை தேர்தலின் பின் சபையில் ஆளும் கட்சி சார்பான தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். இதனை மனதில் கொண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் போட்டி, பொறாமைகளைவிட்டு ஒன்றிணைந்து செயல்படல் வேண்டுமென பிரதி சுகாதார அமைச்சரும் பெருந்தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈரான் தயாரித்துள்ள ஏவுகணைகள் அமெரிக்காவின் பாவனையில் உள்ள ஏவுகணைகளை விட 3 மடங்கு அதிவேகம் கூடியது என தெரிவித்துள்ள இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவராலய கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டாக்டர் செய்யது மஃமூத் ரீசா மாராண்டி , ஈரான் இஸ்லாமிய புரட்சியின் பின்னர் விமான ஓட்டிகளாக பெண்களும் காணப்படுவதாகவும் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையில் கூடிய ஆர்வம் காட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் மற்றும் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ வளாகத்தில் உள்ள ‌நீ‌திம‌ன்ற‌ங்களைத் தவிர தமிழக‌த்‌தி‌ல் உள்ள அனைத்து கீழ் ‌நீ‌திம‌ன்ற‌ங்களும், தீர்ப்பாயங்களும் நாளை (25ஆ‌ம் தே‌தி) திறக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற பதிவாளர் (நிர்வாகம்) நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழ் நீ‌திம‌ன்ற‌ங்களும் , சென்னையில் மூன்று இடங்களில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீ‌திம‌ன்ற‌ங்களும், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌துக்கு வெளியே அமைந்துள்ள அனைத்து தீர்ப்பாயங்களும் நாளை (25ஆ‌ம் தேதி) முதல் செயல்படும். உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற சம்பவம் காரணமாக கீழ்நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் மூடப்பட்டிருந்த வேலை நாட்கள், இனிவரும் நாட்களில் சரிசெய்யப்படும். இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

நீ‌திம‌ன்ற‌ வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். நீ‌திம‌ன்ற‌ ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நீ‌திம‌ன்ற‌ வளாகத்திற்கு வெளியே சற்று தூரத்தில் காவல‌ர்க‌ள் நிறுத்தப்பட வேண்டும்.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாகத்தில் கடந்த 19ஆ‌‌ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு கீழ் நீ‌திம‌ன்ற‌ங்களில் 20ஆ‌ம் தேதி முதல் 23ஆ‌ம் தேதி வரை நீ‌திம‌ன்ற‌ வளாகத்திற்கு உள்ளே ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்திருந்தால் அதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறை இனிவரும் காலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள நீ‌திம‌ன்ற‌‌ங்கள் மற்றும் மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகள் இன்று (24ஆ‌ம் தே‌தி) கூடி முடிவெடுக்கிறார்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
த‌மி‌ழ் ஈழ ‌விடுதலை‌ப் போர‌ா‌ட்ட‌த்தை‌க் கொ‌ச்சை‌ப்படு‌த்‌‌தியதாகவு‌ம், ‌சி‌‌ங்கள‌க் கை‌க் கூ‌லியா‌ய்‌ச் செய‌ல்படு‌ம் ‘இ‌ந்து’ நா‌ளே‌ட்டை க‌ண்டி‌த்து‌ம் திரா‌‌விட‌ர் இய‌க்க‌த் த‌‌மிழ‌ர் பேரவை சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

செ‌ன்னை அ‌ண்ணாசாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள ‘இ‌ந்து’ நாளேடு அலுவலக‌ம் எ‌திரே நட‌ந்த இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு அ‌ப்பேரவை‌யி‌ன் தலைவ‌ர் சுப.‌வீரபா‌ண்டிய‌ன் தலைமை தா‌ங்‌கினா‌ர். ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌த்‌தி‌ன் போது ‘இ‌ந்‌து’ நாளே‌ட்டு‌க்கு எ‌திராக முழ‌க்க‌ங்க‌ள் எழு‌ப்‌ப‌ப்ப‌ட்டது. இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் திரா‌‌விட‌ர் இய‌க்க‌த் த‌‌மிழ‌ர் பேரவையை சே‌ர்‌ந்த 70 பே‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர் .

ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த அனும‌தி‌யி‌ல்லை எ‌ன்று கூ‌றி அவ‌ர்களை காவ‌ல்துறை துணை ஆணைய‌ர் கணேச மூ‌ர்‌த்‌தி தலைமை‌யிலான கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட அவ‌ர்களை ‌சி‌ந்தா‌தி‌ரி‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள சமுதாய‌க் கூட‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் த‌ங்க வை‌த்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் மாலை‌யி‌ல் அவ‌ர்க‌ள் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வழக்கறிஞர் – காவல்துறையினர் மோதல் விவகாரத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தற்கான காரணத்தை முதல்வர் கருணாநிதி விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை :

வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கசப்புணர்வு ஏற்படுகின்ற அளவிற்கு நிலைமை போய் விட்டது. வழக்கறிஞர் வீட்டிலே உள்ளவர்கள் பலர் காவல்துறையிலே பணியாற்றுகிறார்கள் . காவல் துறையினர் வீட்டிலே உள்ளவர்கள் பலர் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் இருவருக்குமிடையே பகை உணர்ச்சி. இரு தரப்பினரும் யார்? இரு தரப்பினருமே தமிழர்கள் தான். என்னுடைய உடன் பிறப்புகள் தான்.

இவர்கள் இடையே மோதுதல் உருவாகாதா , ரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் நான் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது.

என் உயிரைப் பற்றிக் கவலைப்பட்டு, உடல் நலம் இல்லாத நிலையில் இப்படி அறிக்கை விடலாமா என்று அன்போடு கோபிக்கிறார்கள். இருப்பது ஓர் உயிர் தான், அது போகப் போவது ஒரு முறை தான், அது ஒரு நல்ல காரியத்திற்காகக் போகட்டும் என்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான தம்பி நான் என்ற உணர்வோடு விடப்பட்டது தான் அந்த அறிக்கை.

வீட்டிலே அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் முரண்டு பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களை ஒற்றுமைபடுத்த உண்மையான ஒரு தாயார் வேறு என்னதான் செய்ய முடியும் ? அதைத்தான் நானும் அறிக்கையாக்கி இருக்கிறேன்.

இவ்வாறு கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

தனது அறிக்கையில், கடந்த காலங்களில் இலங்கை பிரச்னைக்காக தி.மு.க. நடத்திய போராட்டங்களையும், இலங்கைத் தமிழர் தலைவர்களை சந்தித்தது குறித்தும் அவர் பட்டியலிட்டுள்ளார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் நாடகம்” எ‌ன்று பா.ம .க. நிறுவனர் ராமதாஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்
செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, தி.மு .க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார் எ‌‌ன்றா‌ர்.

காங்கிரஸ் கட்சியின் 35 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க . அரசை யாராலும் கலைக்க முடியாது. இ‌ந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தினா‌ர் .

இலங்கைத் தமிழர்களு‌க்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வரு‌‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌ன் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையின‌ர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்‌தியு‌ள்ளன‌ர் . இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் எ‌ன்றா‌ர் ராமதா‌ஸ்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான். ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம். இலங்கைப் பிரச்சனையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் எ‌ன்று ராமதாஸ் குற்றம்சா‌ற்‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பா.ம.க. ‌நிறுவன‌ர் டாக்டர் ராமதாஸ் ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்பதைப் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம்சாற்றியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌ :

பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு ஒரு “ஸ்டடி மைன்ட்” வேண்டும். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்பதைப் போல அங்கே போனால் அதிக இடம் கிடைக்குமா , இங்கேயே நீடித்தால் அதிக இடம் கிடைக்குமா? என்று நினைத்துக்கொண்டு செயல்படக்கூடாது . அது மாத்திரமல்ல, அன்றாடம் தன் பேரில் ஏதாவது ஒரு அறிக்கை வந்தால் தான் தன்னை தமிழ்நாட்டு மக்கள் மறக்காமல் இருப்பார்கள் என்று மனதிலே எண்ணுவதையெல்லாம் பேசுவதும் கூடாது.

எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்றால் டாக்டர் ராமதாஸ் முதல் நாள் கலைஞர் தான் எல்லாம், அவர் தான் வழி நடத்த வேண்டும் என்கிறார். அடுத்த நாள் இந்த ஆட்சிக்கு தைரியமில்லை, ஆட்சி கலைப்புக்கு அஞ்சுகிறார்கள் என்கிறார். நேற்றையதினம் கூட்டாக அளித்த பேட்டியின் போது டாக்டர் ராமதாஸ் தி .மு.க. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

இவருக்கு அந்த எண்ணம் இருப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லையே ! கலைஞர் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் இவர்கள் மீது சொல்லவில்லையே? மேலும் டாக்டர் தாங்கள் யாரும் சதிகாரர்கள் அல்ல என்று பேட்டியிலே சொல்லியிருக்கிறார்கள். அவரைப் பற்றிச் சொல்லாததையெல்லாம் யாரோ சொல்லிவிட்டதாக அவரே கூறிக் கொண்டு எதற்காக பதில் சொல்லிக்கொள்கிறார்.

சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது , ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று யார் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றித் தான் “ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார்கள்” என்று சொல்கிறோம். உடனே “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதைப் போல டாக்டர் பதில் சொல்ல முற்படுவானேன்.

முதலமைச்சர் உண்ணாவிரத அறிவிப்பையே நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார் என்றால், இதுவரை எதற்கெடுத்தாலும் நாடகம் என்று ஜெயலலிதாவும், வைகோவும் தான் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் டாக்டர் ராமதாசும் சேர முயற்சிக்கிறாரா? பழி போடுவதும், பழி வாங்குவதும் கலைஞர் பாணி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உங்களை கைது செய்து சிறையிலே அடைத்தார்களே, அதைப்போல கலைஞர் ஏதாவது செய்து விட்டாரா ?

உங்களை கைது செய்தபோது, அதைப்பற்றி அறிக்கை விட்ட ஜெயலலிதா ஏ.சி. அறையிலே இருந்தவர்களுக்கு சிறையிலே இருக்க முடியாமல் மனைவியை தூதாக அனுப்பி வைத்தார்கள் என்று குற்றஞ்சாட்டினாரே, அப்படி ஏதாவது கலைஞர் தற்போது உங்கள் மீது பழி போட்டு விட்டாரா?

மருத்துவமனையிலே முதுகுத் தண்டிலே அறுவை சிகிச்சை செய்த நிலையிலே கூட 24 மணி நேரமும் மக்கள் பிரச்சனைக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவரைப் பார்த்து நாக் கூசாமல் நாடகம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கே அது சரியாகப்படுகிறதா? நாளைக்கே கூட்டணி வரலாம், வராமல் போகலாம், அப்போது உங்களைச் சந்திக்கும் போது, கலைஞர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று சொன்ன சொல் போகுமா?

உறவு இருக்கட்டும், இல்லாமல் போகட்டும், ஆனால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது . ஆனால் நீங்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். கலைஞரைப் பொறுத்தவரை அவர் பழி வாங்கவும் மாட்டார், பழி போடவும் மாட்டார். அதற்கு தமிழ்நாட்டில் வேறொருவர் இருக்கிறார். அவர் கடைக்கண் பார்க்க மாட்டாரா என்று நீங்கள் தவிப்பது எங்களுக்கு நன்றாக தெரியவே தெரிகிறது ” எ‌ன்று அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதிக்கு நாளை தையல் பிரிக்கப்படும் என்று மருத்துவர்கள் அறிவித்திருப்பதை அடுத்து, இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தவும், மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியு‌ம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சா‌ர்‌பி‌ல் நாளை டெ‌ல்‌லி‌‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌த் தலைவர் சரத்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்
இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவும் , அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தலைவர் சரத்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுடெல்லியில் நாளை (25ஆ‌‌ம் தேதி) நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகளும், அனைத்து மாவட்ட செயலாளர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்கின்றனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமராகப் பதவியேற்கும் திட்டம் எதுவும் இல்லை என அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று காலை குஜராத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அம்பாஜி கோயிலுக்குச் சென்றார். பின்னர் காந்திநகரில் இளைஞர் காங்கிரஸால் மேற்கொள்ளும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் என ஏற்கனவே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டதால், யார் பிரதமர் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறினார்.

இதற்கிடையில், டன்டா தாலுக்காவின் சனாலி கிராமத்திற்கு ராகுல் காந்தி சென்ற போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வரும் 2014 இல் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எதிர்காலத்தை பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை என ராகுல் காந்தி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
த‌னது வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ன் கண‌க்கு ‌விவர‌ங்களை அமெ‌ரி‌க்க அர‌சி‌ற்கு‌த் தருவதாக சு‌வி‌ஸ் வ‌ங்‌கிக‌ளி‌ல் ஒ‌ன்று ஒ‌ப்பு‌க்கொ‌‌ண்டு‌ள்ளதாக‌த் தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளதை அடு‌த்து, இ‌ந்‌திய வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ன் கண‌க்கு ‌விவர‌ங்களை‌ ம‌த்‌திய ஐ.மு.கூ. அரசு கே‌ட்டு‌ப்பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது .

இதுகு‌றி‌த்து அ‌ந்த‌க் க‌ட்‌சி‌யி‌ன் அர‌சிய‌ல் தலைமை‌க்குழு இ‌ன்று ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ‌நி‌தி மோசடி உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு கு‌ற்ற‌ங்க‌ளி‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ள் ஈடுபடுவதை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல், சு‌வி‌ஸ் வ‌ங்‌கிக‌ளி‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ள் வை‌த்து‌ள்ள கண‌க்குக‌ளி‌ன் ‌விவர‌ங்களை‌‌ப்பெ‌ற ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் பெருமள‌வி‌ல் வ‌ரி ஏ‌ய்‌ப்பு செ‌ய்து‌ள்ள நப‌ர்க‌ளி‌ன் கண‌க்கு ‌விவர‌ங்களை அமெ‌‌ரி‌க்கா‌வி‌ற்கு‌த் தருவத‌ற்கு ‌மிக‌ப்பெ‌ரிய சு‌வி‌ஸ் வ‌ங்‌கியான யுஎ‌ஸ்‌பி ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளதையு‌ம், இதுபோ‌ன்றதொரு நடவடி‌க்கை‌க்கு ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ‌பிரதம‌ர் கா‌ர்ட‌ன் ‌பிரெள‌‌ன் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளதையு‌ம் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளது.

கரு‌ப்பு‌ப் பண‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌த்து‌ப் ப‌றிமுத‌ல் செ‌ய்வது, வ‌ரி ஏ‌‌ய்‌ப்பு‌, ‌நி‌தி மோசடி உ‌ள்‌ளி‌ட்ட கு‌ற்ற‌ங்களை‌த் தடு‌ப்பது ஆ‌கியவ‌ற்‌றி‌ல் ம‌த்‌திய அரசு உ‌ண்மை‌யான அ‌க்கறையை கொ‌‌ண்டிரு‌க்குமானா‌‌ல், சு‌வி‌ஸ் வ‌ங்‌கிக‌ளி‌ன் இரக‌சிய‌க் கண‌க்குக‌ளி‌ல் இ‌ந்‌‌திய‌ர்க‌ள் கு‌வி‌த்து‌ள்ள ‌நி‌தி ‌விவர‌ங்களை‌ ஆ‌ய்வு செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பீகாரின் சரன் தொகுதியில் போட்டியிட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமைச்சர் லாலு , தொகுதி மறுசீரமைப்புப் பணிக்குப் பின்னர் சாப்ரா தொகுதியின் பெயர் சரன் என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகுதியிலேயே தாம் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.

மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்து வரும் லாலு பிரசாத் கடந்த மக்களவைத் தேர்தலில் சாப்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது நினைவில் கொள்ளத்தக்கது.

வகுப்புவாதமும், பயங்கரவாதமும் உடன் பிறந்த சகோதரிகள் போல எனக் குறிப்பிட்ட லாலு, வகுப்புவாதத்தை கடைப்பிடித்து வரும் பா.ஜ.க. வுக்கு இந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் சிறந்த பாடம் புகட்ட வேண்டும் . அதற்கு அனைவரும் தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் தேதி காவல‌ர்க‌ள் நட‌த்‌திய தடியடியை‌க் கண்டித்து, நாடு முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி கருப்பு தின‌ம் அனுசரிக்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌‌கில இ‌ந்‌திய வழக்கறிஞர் ச‌ங்க‌‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகுறித்து புது டெல்லியில் நட‌ந்த அகில இந்திய வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ங்க‌க் கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல‌ர்க‌ள் நடத்திய தடியடி‌யி‌ல் உயர் நீதிமன்ற நீதிபதியு‌ம், பல வழக்கறிஞர்களு‌ம் காயமடைந்துள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலைக் கண்டி‌த்து நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் பிப்ரவரி 27ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் எ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

அதேபோல, உயர் நீதிமன்ற தாக்குதல் குறித்து விசாரணை நடத்த அகில இந்திய வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ங்க‌த் தலைவர் என்.பி. சின்ஹா தலைமையில் 5 பேர் குழுவை அமைப்பதற்கு‌ம் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் முதல்வர் கருணாநிதி‌யிட‌ம், தடியடி‌யி‌ல் தொடர்புள்ள காவ‌ல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவார்கள்.

தடியடி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்குமாறு தற்காலிக தலைமை நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயவிடம் கோரிக்கை விடுக்கவும் இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செய்யப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 81வது ஆஸ்கார் விருது விழாவில் இந்திய சிறுமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஸ்மைல் பின்கி’ சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.

இதையடுத்து இப்படத்தில் நடித்த சிறுமி பின்கி சோன்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது மட்டுமின்றி உத்தரப்பிரதேசத்தின் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அச்சிறுமியின் சொந்த கிராமமான டாபாய் விழாக்கோலம் பூண்டுள்ளது .

உதடுபிளவு காரணமாக சமூகத்தால் ஒரு சிறுமி புறக்கணிக்கப்படுகிறார். பின்னர் சமூக சேவகி ஒருவரின் உதவியால் பின்கியின் உதடுப்பிளவு சரி செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து சமூகத்தினரால் அந்தச் சிறுமி ஏற்றுக் கொள்ளப்படுவது போல் ‘ஸ்மைல் பின்கி ’ படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உதடு பிளவுபட்ட சிறுமியாக பின்கி சோன்கர் நடித்துள்ளார்.

சுமார் 39 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை இயக்கிய அமெரிக்கர் மெகன் மைலன் ஆஸ்கார் விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் மேடையில் பேசுகையில், சிறுமி பின்கி சோன்கருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையில் , பின்கியின் தாய் நிர்மலா தேவியைத் தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் பேசுகையில், தனது மகள் நடித்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது பெருமையளிக்கிறது என்றார் .

விருது கிடைத்த செய்தியை அறிந்த கிராமவாசிகள், பின்கியை பாராட்டுவதற்காக அவரது குடிசையின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மும்பை மீதான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ அனுமதி கோரியுள்ளது. எனினும், இதற்கான ஒப்புதலை பாகிஸ்தான் இதுவரை அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதுதொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்ஃபோர்ட், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரிக்க எஃப்.பி. ஐ அனுமதி கோரியுள்ளது உண்மைதான்.

ஆனால் எனக்குத் தெரிந்த வரை அதற்கான அனுமதியை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை. எனவே பாகிஸ்தானின் அனுமதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அல்காய்தா மற்றும் தாலிபன் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்க சிறப்புப் படையினர் பாகிஸ்தானில் ரகசியமாக செயல்பட்டு வருவதாக ‘நியூயார்க் டைம்ஸ் ‘ நாளிதழ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சிறப்புப்படையை சேர்ந்த 70க்கும் அதிகமான ராணுவ ஆலோசகர்களும் தற்போது பாகிஸ்தானில் உள்ளனர். இவர்கள், பயங்கரவாதிகளுடனான மோதலை எதிர்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படை முகாம்களில் தங்கியிருந்து தொடர்ந்து பயிற்சிகள் பெற்று வருகின்றனர்.

எனினும், பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேரான மோதல்களில் ஈடுபடுவதை அவர்கள் பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.

பயங்கரவாதிகளை வேரோடு அழிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் இருந்தே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும், பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்புடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சர்வதேசபொருளாதார நெருக்கடியானது அகதிகளின் தொகையை அதிகரிக்கும் என்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நேற்று திங்கட்கிழமை நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனைக்கூறிய அவர் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் குற்றம் சாட்டும் நிலைமையை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார் .
சில நாடுகளில் பொருளாதார நெருக்கடியானது அந்நியர்கள் தொடர்பான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் “பிறப்பாக்கியாக’ இருக்கும் என்று அவர் குறிப்பிட்டதுடன் எந்தநாடு என்று எதனையும் அவர் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவில்லை.
அரசியல்வாதி என்ற முறையில் நான் பெற்ற அனுபவத்தின் பிரகாரம் நாடொன்றில் நிலைமை மோசமாக இருக்கும்போது இரு விடயங்கள் இலக்குவைக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. ஒன்று அரசு மற்றையது வெளிநாட்டவர்கள் என்று முன்னாள் போர்த்துக்கல் பிரதமரான அன்ரனியோ கூறியுள்ளார்.
பொருளாதார நிலைமை மோசமடையும் போது உலகின் பல பகுதிகளில் வெளிநாட்டவர் மீது வெறுப்புக்கொள்ளும் போக்கு தவிர்க்க முடியாதது என்று கட்டரஸ் கூறியுள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடியான மோதல்கள் மற்றும் இடம்பெயர்ந்த அகதிகள் தொடர்பான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்றும் கட்டரஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கங்கத்துடன் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக அங்கு சென்றுள்ள அன்ரனியோ கட்டரஸ் ஆசிய பசுபிக்பிராந்தியத்தில் புகலிடம் தேடுவோரை அழைத்துச்செல்லும் நடவடிக்கைகளை இந்தோனேஸியா போதிய அளவுக்கு தடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இராக்கில் 2003ல் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு நடந்ததை அடுத்து, சூறையாடப்பட்டு, வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, சுமார் ஆறாண்டுகளுக்குப் பின்னர், பாக்தாதில் உள்ள இராக்கிய தேசிய அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 15,000 காட்சிப்பொருட்கள் திருடப்பட்ட அந்த நேரத்தில், படையினருக்கு அவர்களைத் தடுக்கத் தலையிடும் உத்தரவு இல்லாததால், இந்தச் செயலை பார்த்துக்கொண்டு அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
இதில் சுமார் 5,000 பொருட்கள் மீட்கப்பட்டுவிட்டன.
இந்த அருங்காட்சியகத்தை அதிகாரபூர்வமாக மீளத்திறந்துவைக்கும் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இராக்கிய பிரதமர் நூரி அல் மலிக்கி, இந்த காட்சியக அரங்குகளைப் பார்வையிட்டார் .
இந்த அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படுவது, அங்கு இயல்பு வாழ்க்கை மீண்டும் வருவதற்கான மற்றுமொரு அறிகுறியாக இராக்கிய அரசு கருதுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
லோர்ட் றெசிஸ்டண்ட் ஆர்மி அதாவது எல் ஆர் ஏ எனப்படுகின்ற கிளர்ச்சிக்குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காங்கோ ஜனநாயகக் குடியரசின் வட பகுதியில் தமது பிரசன்னத்தை பலப்படுத்துவோம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
எல் ஆர் ஏ கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்படும் டுங்கு என்னும் நகருக்கு மேலதிக இராணுவத்தினருடன் பல ஹெலிக்கொப்டர்களையும் அனுப்பவுள்ளதாக ஐ. நா தெரிவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் மேலும் 1500 எகிப்திய சிப்பாய்கள் காங்கோவில் இருப்பார்கள் என்று அங்கு செயற்படும் ஐ. நாவின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை தாக்கத் தவறிவிட்டார்கள் என்று, காங்கோவில் செயற்படும் ஐ.நாவின் பிரிவு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த நத்தார் பண்டிகை முதல் இதுவரை எல் ஆர் ஏயினால் 1000 பேர்வரை அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
டார்பூரில் போர் குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை இழைத்த குற்றச்சாட்டில் சுடானிய அதிபர் ஒமர் அல் பஷீர் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதா, இல்லையா என்பது குறித்து மார்ச் மாதம் நான்காம் திகதி அறிவிக்கப்படும் என்று த ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த பிடியாணை பிறப்பிப்பது தொடர்பில் நாடுகளுக்கு இடையிலான அபிப்பிராயங்கள் மாறுபட்டுள்ளதாகவும் , பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா ஆகியன இந்தப் பிடியாணையை ஆதரிக்கின்ற அதேவேளையில், அரபு லீக், ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் சீனா ஆகியன அதனை ஆதரிக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
டார்பூரில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அங்கு சமாதான பேச்சுக்களை நடத்தும் வகையில் இந்த பிடியாணை தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று எகிப்து கேட்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 145.05 sl /63.43in
1 us $ = 114.05 sl / 49.87in
1 swiss fr = 97.62sl / 42.69in
1 uk pound = 165.65sl / 72.44in
1Saudi Arabian Riyal = 30.41sl /13.29 in

Leave a Reply

Your email address will not be published.