விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பு அரசாங்கத்தால் நிராகரிப்பு

விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நிபந்தனைகளுடன் கூடிய விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விடுதலைப்புலிகள் நிபந்தனைகள் இன்றி முதலாவதாக ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், எங்களது நிலைப்பாடு அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்பதுதான். எங்களது இந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை எனத் தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.