வன்னி மக்கள் தமது மண்ணில்தான் வாழ விரும்புகின்றனா்: நா.உ. ச.கனகரத்தினம்

வன்னியில் வாழ்ந்து வரும் மக்கள் தமது மண்ணில்தான் வாழ ஆசைப்படுகின்றனா்; எந்த ஒரு திறந்தவெளிச் சிறைகளிலும் வாழ அவா்கள் விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் கூறியுள்ளார்.

மக்களை எடுக்கின்றோம் என்ற பாணியில் பெரும் இன அழிப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிடுகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போகாது.

சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்த உலகம் செயற்பட வேண்டும். மக்கள் தமது மண்ணில்தான் வாழ விரும்புகின்றனர் என்றும் ச.கனகரத்தினம் மேலும் தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.