விடுதலைப்புலிகள் 12 பேர் சரணடைந்ததாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே போர்ப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களோடு சேர்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படும் விடுதலைப்புலிகள் 12 பேர் செவ்வாய், புதன்கிழமைகளில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

முதல் நாள் ஒரு பெண் உட்பட பத்து பேரும், அடுத்த நாள் இரண்டு பெண் உறுப்பி்னர்களும் இவ்வாறு இராணுவத்தி்னரிடம் சரணடைந்துள்ளதாகவும் இராணுவ தலைமையகம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரால் நேற்றைய தினம் 3 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், புதுக்குடியிருப்பு பகுதி மோதல்களை அடுத்த தேடுதலில் விடுதலைப்புலிகளின் 5 சடலங்கள், ஆயுதத் தளபாடங்கள் என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.