நேற்றைய வான் தாக்குதலில் சிறிலங்கா படையினர் மூவர் பலி

தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்ட சிறிலங்கா படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது சிறிலங்கா வான் படையினர் நேற்று நடத்திய வான் தாக்குதலில் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் கடற்படையினர், தரைப்படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது நேற்று புதன்கிழமை பிற்பகல் சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இந்த சீர்திருத்தப் பள்ளியினை அடிக்கடி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு வருவது உண்டு.

அத்துடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் இதன் புவி நிலையிடத் தகவல் இருக்கின்றது.

இதனை, அவர்கள் ஏற்கனவே தாக்குதல் தவிர்க்கப்பட வேண்டிய இடம் என சிறிலங்கா படைத்தரப்புக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.