‘முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் உணவுப்பொருட்கள்’- இலங்கை அரசு அறிவிப்பு

மோதல்கள் நடைபெறும் முல்லைத்தீவுக்கு நாளை திருகோணமலையில் இருந்து கப்பல் மூலம் உணவுப்பொருட்களை அனுப்பவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியுடன் செல்லும் கப்பலில், இலங்கை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டின் பேரில் இந்த உணவுப் பொருட்களின் முதல் தொகுதி அனுப்பப்படுவதாகவும், நாளை காலை 8 மணிக்கு அந்தக் கப்பல் முல்லைத்தீவைச் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.

அங்கு அவற்றை முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் பொறுப்பேற்று விநியோகிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை தரை மார்க்கமாக அங்கு உணவுப்பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.