இராணுவ வெற்றிகளுக்காகவே மக்கள் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்தனர் – ஜே.வி.பி.

இராணுவ வெற்றிகளைக் கருத்திற் கொண்டு மக்கள் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது எனவும் இது படைவீரர்களது தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வடமத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வெற்றிகளை பிரச்சாரம் செய்து இந்த மாகாணசபைத் தேர்தல்களின் ஆட்சியையும் அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களுக்கு முன்னரும் தேர்தல்களின் போதும் மிகக் கடுமையான முறையில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.